Published : 17 Dec 2019 02:19 PM
Last Updated : 17 Dec 2019 02:19 PM

சென்னை பட விழா | தேவிபாலா | டிசம்.18 | படக்குறிப்புகள்

காலை 10.45 மணி | PATHS IN THE NIGHT / WAGE IN DIE NACHT |DIR: ANDREAS KLEINERT | GERMANY | 1999 | 98'

தனது ஐம்பதுகளின் பிற்பகுதியில் இருக்கும் வால்டர் வேலையில்லாமல் இருக்கிறார். சமையலறை மேசையில் தனியாக அமர்ந்து அவர் ஒரு தினசரி செய்தித்தாளின் வேலை விளம்பரங்களை படிக்கிறார், ஆனால் எந்த வேலைக்கும் அவர் விண்ணப்பிக்கவில்லை. அவரது மனைவி சில்வியா ஒரு உணவகத்தில் பணியாளராக ஒரு பதவியை ஏற்றுக்கொண்டு இவரது வாழ்வாதாரத்தையும் கவனித்து வருகிறார். ஆனால் வால்டர் இந்த நிலைமையை தொடர்ந்து ஏற்க முடியாது.

4 wins & 5 nominations

பகல் 1.00 மணி | ON THE BLUE CANVAS / CHETAN SINGH | DIR: HINDI | HINDI | 2019 | 72'

கோடோட், ஒரு திறமையான கலைஞர் தனிமையில் வாழ்கிறார், வெளி உலகத்திலிருந்து தன்னை மூடிக்கொள்கிறார்; அவர் தனது ஓவியங்களில் தனது கடந்த காலத்தை மீண்டும் உருவாக்க முயற்சிக்கிறார். ஒரு நாள் ஓர் அழகான பெண் அவர் வாழ்க்கையில் குறுக்கிடுகிறார். அதன்பிறகு ஓவியரின் நடவடிக்கைகளில் நிறைய மாற்றங்கள். அப்பெண்ணின் வருகையும் அணுகுமுறைகளும் வித்தியாசமாக இருக்கிறது. ஓவியரின் கவனமும் சிதறத் தொடங்குகிறது. அப்பெண் தன்னை ஓர் உருவப்படமாக வரைய வேண்டுமென கோடோட்டை ஆணையிடுகிறாள், ஆனால் அவனது சந்திப்பில் ஏற்படும் நினைவிலிருந்து அந்த ஓவியத்தை உருவாக்கும்படி அவள் கூறுகிறாள். வேறு வழியில்லாமல் அவர் வேலையை ஏற்றுக்கொள்கிறார். அதேநேரம் மர்மமான ஒருதிசையை நோக்கி தான் செல்வதை அவர் உணர்கிறார்.

நிறைய விருதுகளைப் பெற்றுள்ள படம்

பிற்பகல் 3.00 மணி | THO SHALT NOT KILL | SA NU UCIZI | DIR: CATALLIN ROTARU | GABI VIRGINIA SARGA | ROMANIA | 2018 | 120'

அறுவை சிகிச்சை நிபுணரான கிறிஸ்டியன் ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். அங்கு அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக முடிந்தாலும் தொடர்ந்து நோயாளிகள் எதிர்பாராத விதமாக இறப்பது கிறிஸ்டியனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதை கண்டுபிடிப்பதற்காக களமிறங்கும் அவர், அதிர்ச்சிகரமான உண்மை ஒன்றை கண்டுபிடிக்கிறார். நோயாளிகளின் மரணங்களை கிறிஸ்டியனால் தடுக்க முடிந்ததா என்பதே ’தோ ஷால்ட் நாட் கில்’ படம்.

மாலை 5.30 மணி | PHOTOGRAPHER / PHOTOGRAPHER | DIR: ZHANG WEI | CHINA | 2018 | 112'

ஷென்சனில் வசிக்கும் ஒரு குடும்பம். உடல் ஓவியங்களை புகைப்படம் எடுக்கும் கணவனும், பணப் பித்து கொண்ட மனைவியும் பிரிந்து, சில வருடங்கள் கழித்து ஒன்று சேர்கின்றனர். இவர்களின் போராட்ட குணம், சொந்தத் தொழில் தொடங்கும் எண்ணம் இருக்கும் மகன், அம்மாவின் ஆதிக்கத்தை கடுமையாக எதிர்த்து, மொபைல்களுக்கான புகைப்பட செயலியை உருவாக்க முற்படுகிறான்.

மாலை 8.00 மணி | THE NICEST COUPLE / DAS SCHONSTE PAAR | DIR: SVEN TADDICKEN | GERMANY | 2019 | 97'

ஆசிரியர்களாக பணிபுரியும் இளம் காதலர்கள் இருவர், கோடைக்கால விடுமுறையை மெடிட்டரேனியன் கடல் பகுதியில் கழிக்கின்றனர். அப்போது திடீரென இருவரும், மூன்று இளைஞர்களால் தாக்கப்படுகின்றனர். இதில், அப்பெண் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார். இச்சம்பவத்திற்கு 2 ஆண்டுகள் கழித்தும் இருவரும் ஒன்றாக வாழ்வதோடு மட்டுமல்லாமல், தங்களின் கடந்த கால துன்பியல் சம்பவத்திலிருந்து பலத்தை பெறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x