Published : 15 Dec 2019 11:25 AM
Last Updated : 15 Dec 2019 11:25 AM

சென்னை பட விழா | தேவி | டிசம்.16 | படக்குறிப்புகள்

காலை 11.00 மணி | DESPITE THE FOG | NONOS-TANTE LA NEBBIA | DIR: GORAN PASKALJEVIC | SERBIA | 2018 | 120'

இன்டர்போலின் கூற்றுப்படி, பெற்றோரின் கவனிப்பு இல்லாமல் மேற்பட்ட சிறார் அகதிகள் இன்று ஐரோப்பாவில் அலைந்து கொண்டிருக்கிறார்கள், அவர்களில் பாதி பேர் இத்தாலிய சாலைகளில் உள்ளனர். அவர்களின் ஒருவரைப்பற்றியக் கதைதான் டிஸ்பைட் இந்த ஃபாக். ஒரு சிறந்த வாழ்க்கையைத் தேடி இத்தாலிய கடற்கரையில் ரப்பர் படகில் பயணம் செய்யும் போது முகம்மதுவின் பெற்றோர்கள் நீரில் மூழ்குகின்றனர். அப்பா அம்மாவை இழந்துவாடும் சர்ஹானை வேறொரு குடும்பத்தினர் எடுத்து வளர்க்கின்றனர். அவர்கள் ஏற்கெனவே தனது மகன் மார்க்கை இதேபோன்ற ஒரு விபத்தில் பறிகொடுத்தவர்கள். வலேரியா (டொனடெல்லா ஃபினோக்ஜாரோ) மற்றும் பாவ்லோ (ஜியோர்ஜியோ டிராபாசி) ஆகியோர் சுற்றுப்புறத்திலும் சொந்த குடும்பத்தினரிடமிருந்தும் எதிர்ப்பை எதிர்கொள்கின்றனர், அவர்கள் முகம்மதுவை வைத்திருப்பதற்கான முடிவை ஏற்கவில்லை - இது இனவெறி பெருகிய மூடுபனிக்குள் மூழ்கிக் கொண்டிருக்கும் ஒரு உலகின் கதையாகும்.

பிற்பகல் 2.00 மணி | BEANPOLE / DYLDA |DIR: KANTEMIR BALAGOV | RUSSIA | 2019 | 130'

1945ஆம் ஆண்டு. இரண்டாம் உலகப்போரின் கோரப்பிடியில் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளது லெனிங்க்ராட் நகரம். மக்கள் அனைவரும் உறவுகளையும் உடைமைகளையும் இழந்து நிற்கதியாகியுள்ளனர். வரலாற்றின் கருப்பு பக்கங்களை கொண்ட அந்த நிகழ்வு ஒரு வழியாக முடிவுக்கு வருகிறது. உயிர் பிழத்த மக்கள் இடிபாடுகளிலிருந்து தங்கள் வாழ்க்கையை துவங்குகிறார்கள். அவர்களின் மத்தியில் இருக்கும் இயா மற்றும் மாஷா இருவரை சுற்றி நிகழும் கதையே பீன்போல்.

மாலை 4.30 மணி | THE BRA / THE BRA | DIR: VEIT HELMER | AZERBAIJAN | 2019 | 90'

ரயில் ஓட்டுநர் நுர்லான் ஓய்வு பெறுவதற்கு முன் கடைசி ஒரு முறை பாகுவுக்கு ரயில் ஓட்டிச் செல்கிறார். மக்கள் வசிக்கும் பகுதியை ஊடுருவிச் செல்லும் ரயில் பாதையில், ஒரு பெண்ணின் உள்ளாடை அவரது ரயில் கண்ணாடியில் சிக்குகிறது. தனது தனிமைக்கு வடிகாலாக, பாகு பகுதியில் ஒரு அறை எடுத்துத் தங்கி, அந்த உள்ளாடையின் உரிமையாளர் யார் என்று தேடிப் போகிறார் நுர்லான்.

மாலை 7.00 மணி | BUOYANCY / HBUOYANCY | DIR: RODD RATHJEN | AUSTRALIA | 2019 | 111'

தென்கிழக்கு ஆசியாவில் நவீன அடிமைத்தனத்தை புயோயான்ஸி திரைப்படம் வெளிப்படுத்தியுள்ளது. கிராமப்புற கம்போடியாவில் வாழும் 14 வயது சக்ரா, தனது கடுமையான தந்தையுடன் ஒரு வெடிக்கும் மோதலுக்குப் பிறகு அவரிடமிருந்து பிரிந்துசெல்கிறான். எல்லையைத் தாண்டி தாய்லாந்திற்குள் செல்ல நன்கு ஊதியம் பெறும் தொழிற்சாலை வேலையைப் பெறுவதற்கான நம்பிக்கையில் அவசரத் திட்டங்களில் ஈடுபடுகிறான். ஆனால் சிறுவன் உடனடியாக இரக்கமற்ற தரகரால் மோசடி செய்யப்படுகிறான், ஒரு மோசமான மீன்பிடி இழுவைப் படகில் ஏறுகிறான், 14 வயது சக்ரா ஒரு தாய்லாந்து மீன்பிடிக் கப்பலின் கேப்டனுக்கு அடிமைத் தொழிலாளியாக விற்கப்படுகிறான் 14 வயது சக்ரா. கப்பலில் கேப்டனின் ஆட்சி கொடூரமானது மற்றும் தன்னிச்சையானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x