Published : 14 Dec 2019 03:47 PM
Last Updated : 14 Dec 2019 03:47 PM

சென்னை பட விழா | அண்ணா | டிசம்.15 | படக்குறிப்புகள்

காலை 9.30 மணி | SOLE | SOLE | DIR: CARLO SIRONI | ITALY | 2019 | 90'

னா, எர்மானோ இருவரை சுற்றியே கதை முழுவதும் நகர்கிறது. போலந்து நாட்டில் இருந்து 7 மாத கர்ப்பிணியாக வரும் லீனா தன் வயிற்றில் இருக்கும் குழந்தையை விற்க முயல்கிறார். அப்போது அவருக்கு எர்மானோ அறிமுகமாகிறார். லீனாவின் கணவராகவும், குழந்தைக்கு தந்தையாகவும் நடிக்க எர்மானோ சம்மதிக்கிறார். குழந்தையை விற்கும் பணத்தில் இருவரும் பிரித்துக்கொள்ள முடிவு செய்கிறார்கள்.
எர்மானோவின் மாமா பேபியோவுக்கு குழந்தை இல்லாததால் தானே குழந்தை வாங்கிக் கொள்வதாகவும், அதுவரை வீட்டில் தங்கி இருக்குமாறும் இருவரையும் கேட்டுக்கொள்கிறார். எர்மானோ, லீனா இருவரும் வெளிஉலகிற்கு தம்பதி போல நடக்கிறார்கள். ஆனால், நாளடைவில் லீனா மீது காதல் வருகிறது.
அதை அவன் வெளிக்காட்டவில்லை. லீனாவுக்கு குழந்தை பிறக்கிறது, குழந்தையை தனது குழந்தை போல் எர்மானோ பாவிக்கிறான். குழந்தையை விட்டுச்செல்லவும் லீனாவுக்கு மனமில்லை. குழந்தையை லீனா விற்றாலா, எர்மானாோ லீனாவிடம் காதலைக் கூறினானா என்பதுதான் கதை. இளம்வயதில் தந்தையான ஒருவரின் உணர்வுகளையும், காதலையும், தாய்மையையும் அழகாகச் சொல்லியிருக்கிறார்கள்



பகல் 12.00 மணி | MAI GHAT: CRIME NO.103/2005 | ANANTH NARAYAN MAHADEVAN | MARATHI | 2019 | 104'

2018 ஆம் ஆண்டு கோடைக்காலம், இந்தியாவில் இந்திய நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக 2 போலீஸ்காரர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. தனது மகன் திருடன் என்று தவறாக முத்திரை குத்தப்பட்டு போலீஸ் கஸ்டடியில் சித்திரவதை செய்யப்பட்டதைக் கண்டு மனம்குலைந்த ஒரு தாய் தனது 13 வருட தனிப்பட்ட யுத்தத்தின் விளைவு அது. பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடூரமான செயலைச் செய்தவர்கள் முதல், அவர்களது குடும்பங்கள் மற்றும் உறவினர்கள் வரை அனைவருமே ஆழமாக எல்லோரும் பாதிக்கப்படும் நிலையில், இந்த படம் வன்முறைச் செயலின் தாக்கத்தை ஆராய்ந்து நமது சமூக மற்றும் தனிப்பட்ட மனசாட்சியைக் கேள்விக்குள்ளாக்குகிறது. உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம்.

பிற்பகல் 2.30 மணி | BLAME GAME / DAS ENDE WAHRHEIT PHILIPP | DIR: LEINEMANN | GERMANY | 2019 | 105'

ஜெர்மானிய உளவுத்துறை நிறுவனம் ஒன்றில் நிபுணராக இருக்கிறார், மார்ட்டின் பெஹ்ரென்ஸ். அந்த நிறுவனத்திற்காக, தேடப்படும் தீவிரவாதி ஒருவர் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதலுக்கு வழிவகுக்கும் உளவுத்தகவலை பெறுகிறார் மார்ட்டின். சில நாட்களுக்குப் பிறகு, இந்த வான்வெளி தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்படும் தீவிரவாதத் தாக்குதலில் மார்ட்டினுக்கு நெருக்கமானவர்கள் உயிரிழக்கின்றனர். இந்தத் துயரிலிருந்து வெளியேறி, தீவிரவாத தாக்குதல் குறித்து மார்ட்டின் தானே விசாரிக்க தொடங்குகிறார். அந்த விசாரணையின் முடிவில், நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான கோடு, தான் நினைத்திருக்கும் அளவுக்கு மிகக் குறுகியது என்பதை உணர்கிறார்.


மாலை 4.30 மணி | THE COUNTY / HERADID |DIR: GRIMUR HAKONARSON | ICELAND | 2019 | 90'

இங்கா மற்றும் ரெய்னிர் இருவரும் தம்பதிகள். ஐஸ்லாந்தின் ரெய்ஜாவிக் அருகே உள்ள சிறிய கிராமத்தில் பால் பண்ணை ஒன்றை சொந்தமாக நடத்தி வருகின்றனர். பால் பண்ணையால் ஏற்பட்ட கடன் நெருக்கடியால் மன உளைச்சலில் சிக்கித் தவிக்கின்றனர். சிறிது காலத்திலேயே கணவர் ரெய்னிர் இறந்துவிட இங்கா பால் பண்ணைக்குப் பொறுப்பேற்கிறார். அங்கு ஏற்படும் நஷ்டம் எதனால் என்று கண்டறிகிறார். அங்குள்ள கூட்டுறவு சங்கம் உள்ளூர் விவசாயிகள் மீது செலுத்தும் ஆதிக்கத்தையும் தெரிந்துகொள்கிறார். மாஃபியா கும்பலுக்கு எதிராகப் போராட முடிவெடுக்கிறார். ஆனால்...?

மாலை 7.15 மணி | SICK SICK SICK | SEM SEU SANGUE | DIR: ALICE FURTADO | BRAZIL / FRANCE / NETHERLANDS | 2019

ஆழ்ந்த சிந்தனை கொண்டவள் சில்வியா. அவள் குடும்பம், பள்ளி என்ற தினசரி வாழ்க்கையில் நாட்டமில்லாதவள். பல்வேறு பள்ளிகளிலிருந்து நீக்கப்பட்ட ஆர்தர் என்ற இளைஞன் அவளது வகுப்பில் சேரும்போது அவள் வாழ்க்கை மாறுகிறது. அவனது இளமைத் துடிப்பில் ஆச்சரியப்படும் சில்வியா அவனை காதலிக்கிறாள். ஆனால் ஆர்த்தருக்கு ஹீமோஃபீலியா என்ற தீவிரமான குறைபாடு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x