Published : 12 Dec 2019 03:55 PM
Last Updated : 12 Dec 2019 03:55 PM

சென்னை பட விழா | கேஸினோ  | டிசம்.13 | படக்குறிப்புகள்

காலை 9.45 மணி | HOLY BEASTS / LA FLERA Y LA FIESTA | DIR: LAURA AMELIA GUZMAN AND ISRAEL CARDENAS | DOMINICAN REPUBLIC, ARGENTINA, MEXICO | 2018 | 164'

வயதான நடிகை வேறா, சாண்டோ டொமினிகோ வந்திறங்குகிறாள். தனது கடைசி படமாக தனது இறந்த நண்பன் ஒருவனின் முடிவடையாத கதையைப் படமாக எடுக்க நினைக்கிறாள். அவள் நடிகையாக உச்சத்தில் இருந்த நேரத்தில் அவளது நண்பர்களாக இருந்த தயாரிப்பாளர் விக்டரும், ஒளிப்பதிவாளர் மார்டினும் அவளுடன் படத் தயாரிப்பில் இறங்க்கின்றனர். படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. கவர்ச்சிகரமான பல விஷயங்களுக்கு நடுவில், பிரச்சினையும், மரணமும் கூட சூழ்ந்து கொண்டு படத் தயாரிப்பில் மர்மமான சூழலைக் கொண்டு வருகிறது.

பகல் 12.15 மணி | ARAB BLUES / UN DIVAN A TUNIS | DIR: MANELE LABIDI LABBE | FRANCE / TUNISIA | 2019 | 88'

மனோதத்துவ நிபுணரான செல்மா 10 ஆண்டு பாரீஸ் வாழ்க்கைக்குப் பிறகு சொந்த நாடு திரும்புகிறார். அங்கு தனது மனோதத்துவப் பயிற்சி மையத்தை குறுக்கு வழியில் தொடங்க எண்ணுகிறார். இங்கிருந்துதான் அரபு ப்ளூஸ் படம் தொடங்குகிறது. அங்குள்ள உள்ளூர் கலாச்சாரத்திற்கும் செல்மாவின் மனோதத்துவ நிபுணத்துவ சிகிச்சைக்கும் இடையே பெரிய இடைவேளை நீடிக்கிறது. இதனால் செல்மா எதிர்பாராத சிக்கல்களை சந்திக்கிறார். இதற்கிடையில் செல்மாவை போலீஸ் அதிகாரி ஒருவர் தொடர்ந்து கண்காணிக்கிறார். தனக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்களை எல்லாம் செல்மா கடக்கிறரா என்பதை நகைச்சுவை கலந்த திரைக்கதையில் கூறி இருக்கிறது அரப் புளூஸ்.

பகல் 2.45 | HOMEWARD / EVGE | DIR: NARIMAN ALIEV | UKRAINE | 2019 | 96'

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் நடந்த போரில் தனது மூத்த மகனை இழந்த முஸ்தபா, சிறுவனின் உடலை அவன் பிறந்த நிலமான கிரிமியா தீபகற்பத்திற்கு கொண்டு வர தீர்மானிக்கிறான். அவரும் அவரது இளைய மகனும் சேர்ந்து ஒரு பயணத்தை மேற்கொண்டனர், எப்போதும் இடைவெளியோடு இருக்கும் அவர்களிடையே உறவை ஆழமான உறவு ஏற்பட அந்த பயணம் ஒரு வாய்ப்பாக அமைகிறது.

மாலை 4.45 மணி | BALLON | DIR: MICHAEL HERBIG | GERMANY | 2018 | 125'

இந்த படம் ஒரு உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது மற்றும் 1979 ஆம் ஆண்டில் பனிப்போரின் போது, நடைபெற்ற சம்பவங்கள். ஜெர்மனி குடியரசிலிருந்து ஸ்ட்ரெல்சிக் மற்றும் வெட்ஸல் ஆகிய குடும்பத்தினர் ஒரு தங்குவதற்கான வசதியுடன்கூடிய சூடான காற்று பலூன் மூலமாக மேற்கு ஜெர்மனிக்கு கடந்து செல்ல விரும்புகிறார்கள். துரிங்கியாவிற்குள் உள்ள ஒரு சிறிய நகரமான பெனெக்கிலிருந்து தொடங்கி, மிகக் குறுகியவை என்பதை அறிந்தவை பவேரியாவை அடைய காகம் பறக்கும் தூரம் மற்றும் வெஸ்டர்ன் பிளாக் சுமார் 25 கி.மீ.தூரத்தை யாருக்கும் தெரியாமல் பறந்துசென்றுவிட முயற்சிகள் மேற்கொள்கிறார்கள். ஆனால் அதன் முடிவு என்ன? இந்த திரைப்படம் பன்மடங்கு தோல்வியுற்ற முயற்சிகளின் நினைவாகவும், சற்று முன்னதாகவே, பெர்லின் சுவர் வீழ்ச்சியடைந்த 30 ஆண்டுகளுக்கும் (1989) மற்றும் ஜெர்மன் மறு ஒருங்கிணைப்புக்கும் (1990) நினைவுகூரலாக நாம் காணலாம்.

மாலை 7.00 மணி | THE WARDEN / SORKPOUST | DIR: NIMA JAVIDI | IRAN | 2019 | 90'

1960களில் ஷா ஆட்சியின் காலக்கட்டம். நகரில் ஒரு புதிய விமான நிலையம் அமைகிறது. அதற்கான ஓடுபாதை விமான நிலையத்திற்கு அதேநிலத்திலேயே அமைக்கப்பட வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். விமான நிலையத்திற்கு அருகில் உள்ள சிறைச்சாலையை இடித்துத் தள்ள திட்டம் உருவாகிறது. இதனால் அங்குள்ள சிறைக்கைதிகள் தெற்கு ஈரானில் அமைந்துள்ள சிறைச்சாலைக்கு மாற்றப்பட வேலைகள் நடக்கின்ன. சிறைச்சாலையின் வார்டனான மேஜர் ஜாகேத், கைதிகளை புதிய சிறைக்கு மாற்றும் பொறுப்பை ஏற்கிறார். அவரையே ஏமாற்றிவிட்டு மரணத் தண்டனை கைதி ஒருவன் எப்படித் தப்பிக்கிறான்? இப்பிரச்சினை காவல்துறையின் செயல்பாட்டின் அவசரத்தை கோருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x