Published : 09 Dec 2019 19:45 pm

Updated : 09 Dec 2019 20:39 pm

 

Published : 09 Dec 2019 07:45 PM
Last Updated : 09 Dec 2019 08:39 PM

விக்ரம் - அஜய் ஞானமுத்து இணையும் 'அமர்'?

vikram-movie-titled-as-amar

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படத்தின் தலைப்பு 'அமர்' என்று வெளியான தகவலுக்குப் படக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது.

‘கடாரம் கொண்டான்’ படத்தைத் தொடர்ந்து, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விக்ரம். 'ஆதித்ய வர்மா' படம் வெளியாகிவிட்டதால், தற்போது அஜய் ஞானமுத்து படத்தில் முழுமையாக கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்.

லலித் குமார் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு 'அமர்' என்று தலைப்பு வைக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால், படக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது. விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டது.

ஸ்ரீநிதி ஷெட்டி, இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இந்தப் படத்தின் முக்கியக் காட்சிகளை வெளிநாட்டில் படமாக்க முடிவு செய்துள்ளது படக்குழு.

இந்தப் படத்தில் 10-க்கும் அதிகமான கெட்டப்களில் விக்ரம் நடிக்கவுள்ளார். படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.


விக்ரம்இயக்குநர் அஜய் ஞானமுத்துஅமர்விக்ரம் படக்குழு மறுப்புஇர்பான் பதான்ஸ்ரீநிதி ஷெட்டி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author