Published : 25 Nov 2019 04:13 PM
Last Updated : 25 Nov 2019 04:13 PM

'ஹீரோ' கேம் வெளியீடு: படப்பிடிப்பு நிறைவு

'ஹீரோ' படத்தை விளம்பரப்படுத்த கேம் (game) ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு. மேலும், படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.

மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அர்ஜுன், அபய் தியோல், கல்யாணி ப்ரியதர்ஷன், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஹீரோ'. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் டீஸருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. டிசம்பர் 20-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் (நவம்பர் 24) முடிவடைந்தது.

படப்பிடிப்பு நிறைவடைந்ததை இயக்குநர் மித்ரன், சிவகார்த்திகேயன், கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோர் தங்களுடைய ட்விட்டர் பதிவில் நெகிழ்வுடன் குறிப்பிட்டுள்ளனர். மேலும், 'ஹீரோ' படத்தை விளம்பரப்படுத்த புதிதாக மொபைல் கேம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது படக்குழு.

இதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எப்படியென்றால் 'ஹீரோ' டீஸரில் வரும் ஹீரோ சின்னத்தைச் சேகரிக்க வேண்டும். Pokemon விளையாட்டைப் போல Augmented reality-யில் இந்த விளையாட்டை உருவாக்கியுள்ளது படக்குழு. இதனை இதுவரை 11,500 பேர் டவுண்லோட் செய்து விளையாடி வருகிறார்கள்.

யாரையும் தொந்தரவு செய்யாமல் இந்த கேமை விளையாடுமாறும், பைக்கில் போகும்போது விளையாட வேண்டாம் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x