Published : 23 Nov 2019 08:36 AM
Last Updated : 23 Nov 2019 08:36 AM

என் வாழ்க்கையை ஆன்மிகம்தான் வழிநடத்துகிறது- ரஜினிகாந்த் மனம்திறந்த நேர்காணல்

இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் பொன்விழா கொண்டாட்டம் கோவா தலைநகர் பனாஜியில் கடந்த 20-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதன் தொடக்க விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு ‘ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி’ விருது வழங்கப்பட்டது. இதையொட்டி, தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு ரஜினி அளித்த பேட்டியில் இருந்து..

நீங்கள் மிகவும் பணிவானவர், எளிமை யானவர் என்று உங்கள் ரசிகர்கள், உங் களை அறிந்தவர்கள் கூறுகிறார்களே..

நான் இயல்பாக இருக்கிறேன். இன்றைய காலகட்டத்தில் இயல்புக்கு மீறி இருப்பதே பொதுவான விஷயமாக மாறிவிட்டது. எனவே அது வித்தியாசமாக தோன்றலாம்.

மிக சாதாரண சூழலில் இருந்து இந்த இடத்துக்கு வந்தவர் நீங்கள். திரும்பிப் பார்க்கும்போது எப்படி உணர் கிறீர்கள்?

இதற்கு என் அம்மா, அப்பாவுக்கு, கடவுளுக்கு, சினிமா துறைக்கு, இயக்கு நர்கள், ரசிகர்களுக்குதான் நன்றி கூற வேண்டும்.

உங்களது இந்த ஒட்டுமொத்த பயணத் திலும் திருப்புமுனையாக அமைந்த ஒரு விஷயம் என்று எதை குறிப்பிடுவீர்கள்?

இயக்குநர் கே.பாலசந்தரை சந்தித் ததுதான் என் வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்புமுனை. சென்னைக்கு வந்து திரைப்படக் கல்லூரியில் படித்திருந் தாலும் ஒரு ஹீரோ ஆவேன் என்றெல் லாம் நினைக்கவில்லை. பாலசந்தர்தான் என்னை அடையாளம் கண்டுகொண்டார். அப்போது எனக்கு தமிழ்கூட தெரியாது. அவர்தான் என்னிடம், ‘‘நீ தமிழ் மட்டும் கற்றுக்கொள். உன்னை எங்கே கொண்டு செல்கிறேன் பார்’’ என்றார். என் மீது அவர் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். என்னை எனக்கே அடையாளம் காட்டியவர் அவர்தான்.

‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில்தான் நடித்தேன். பாலசந்தர் என்னிடம் ‘‘இது ஒரு தொடக் கம் அல்ல; ஒரு சோதனை முயற்சிதான்’’ என்றார். ஒரு சரியான தொடக்கம் என்று ‘மூன்று முடிச்சு’ படத்தை சொல்லலாம். ஒரு நல்ல குணச்சித்திர நடிகனாக என்னை உருவாக்க அவர் விரும்பினார். நான் ஒரு ஹீரோ ஆவேன் என்று அவரே கூட எதிர்பார்க்கவில்லை. ஹீரோவாக எனக்கு வாய்ப்பு கொடுத்தவர் கலைஞானம். அதிர்ஷ்டவசமாக அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமுதல், அந்த திசையிலேயே வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது.

தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஹாலிவுட் படங்களில் எல்லாம் நடித்திருக்கிறீர்கள். அது சவாலாக இருந்ததா?

நடிப்பு, உணர்ச்சிகள் ஆகியவை எல்லா இடங்களிலும் ஒன்றுதான். மொழிதான் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது. ஆரம்பகாலத்தில் இந்தி படங்களில் நடிக்க மிகவும் சிரமப் பட்டேன். பின்னர் சிறிது சிறிதாக கற்றுக் கொண்டேன். பெங்களூருவில் இருந்த போது என் தாய்மொழியான மராத்தி, கன்னடம், இந்தி தெரியும். ஆனால் சினிமா வில் பேசுவது வேறு மாதிரியானது.

உங்கள் பழைய நண்பர்களோடு இன்னும் தொடர்பில் இருக்கிறீர்களா?

ஆம். அதை என் அதிர்ஷ்டமாக நினைக் கிறேன். அவர்களோடு இருக்கும்போது ரிலாக்ஸாக, மகிழ்ச்சியாக உணர் கிறேன். அப்போதுதான் சிவாஜி ராவ் என்ற மனிதனாக இருக்கிறேன். ரஜினி காந்தின் வாழ்க்கை முற்றிலும் வேறு மாதிரியானது.

உங்கள் நண்பர்களுக்கு நண்பனாக, உங்கள் குழந்தைகளுக்கு தந்தையாக, எங்கள் அனைவருக்கும் ஒரு நடிகராக எப்படி வித்தியாசப்படுகிறீர்கள்?

கேமராவுக்கு முன்னால் நடிப்பது மட்டுமல்ல; கேமராவுக்கு பின்னால் அனைத்துமே நடிப்புதான். வாழ்க்கை யில் எல்லாமே நடிப்புதானே. ஆனால் சரியாக நடிக்க வேண்டும், அவ்வளவு தான். உங்கள் கதாபாத்திரங்களை உண்மையாகவும், நேர்மையாகவும் செய்ய வேண்டும்.

நீங்கள் இயக்குநரின் நடிகரா?

ஆம். நிச்சயமாக.

கதையை எப்படி முடிவு செய்கிறீர்கள்.. கதையை வைத்தா, இயக்குநரை வைத்தா?

முதலில் இயக்குநரை வைத்துதான் கதையை தேர்ந்தெடுப்பேன். பின்னர் அவரோடு அமர்ந்து ஆலோசித்து, ‘இப்படி செய்யலாம்.. அப்படி செய்ய லாம்..’ என்று யோசனை சொல்வேன். அடிப்படையில் நான் திரைப்படக் கல்லூரி மாணவர் என்பதால் நிறைய மாற்றங்கள் செய்வேன். பாலசந்தரும் அதைத்தான் சொல்லித் தந்திருக்கிறார். ‘இயக்குநர் சொல்வதை அப்படியே செய்வதற்கு நீ எதற்கு? உன் யோசனைகளையும் சொல்லவேண்டும்’ என்பார்.

உங்களுக்கென்று ஒரு தனி ஸ்டைலை உருவாக்க உங்களை ஊக்கப்படுத்தியது எது?

படத்தில் வில்லன் கதாபாத்திரத்துக்கு எந்த எல்லையும் இல்லை. அவனால் எதுவும் செய்ய முடியும். அதனால், அவனுக்கான மேனரிஸங்களை உரு வாக்குவது எளிது. ஹீரோவுக்கு அப்படி அல்ல. ஹீரோவுக்கு சில வரையறைகள் உண்டு. எனவே ஒவ்வொரு படத்திலும் ஒரு புது மேனரிஸத்தை, ஸ்டைலை உருவாக்க வேண்டி இருந்தது

உங்கள் கண்களில் தீ இருந்ததாக பாலசந்தர் குறிப்பிட்டிருந்தார். அது இப்போதும் இருக்கிறதா?

நீங்கள்தான் சொல்ல வேண்டும். அது கடவுள் அருள். நான் என் நடிப்புத் தொழிலை மிகவும் ரசிக்கிறேன். இதை ஒரு சுமையாகவோ, வேலையாகவோ நான் பார்க்கவில்லை. ஒரு விளையாட் டாகத்தான் பார்க்கிறேன். எனவே எனக்கு எந்த டென்ஷனும் இல்லை. நாம் எதை செய்தாலும் ரசித்து செய்யவேண்டும். அவ்வளவுதான்!

உங்களை ஆன்மிகம்தான் வழிநடத்து கிறதா?

என்னை பொறுத்தவரை, என் வேலையை மட்டுமல்லாமல், என் ஒட்டு மொத்த வாழ்க்கையையுமே ஆன்மிகம் தான் வழிநடத்துகிறது.

அதற்காகத்தான் இமயமலை செல்கி றீர்களா?

ஆம். என்னை ரீசார்ஜ் செய்து கொள்வதற்காக.

மூன்று தலைமுறையிலும் உங்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்? நீங்கள் ஒரு சகாப்தமா அல்லது ஒரு நிகழ்வா?

நான் ஒரு நடிகன் மட்டுமே!

ரசிகர்கள் உங்கள் மீது அளப்பரிய அன்பு வைத்திருக்கிறார்களே, அதை எப்படி பார்க்கிறீர்கள்?

என் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அபரிமிதமான அன்பு என்னை வெகு வாக ஆச்சரியப்படுத்துகிறது. உணர்ச்சிப் பூர்வம் ஆக்குகிறது. ஒவ்வொரு படத்தி லும் என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பானதை அவர்களுக்காக கொடுக்கி றேன். என் மீது அன்பு காட்டும் அவர் களுக்காக நான் ஏதாவது செய்ய வேண்டும் என்றும் அந்த அன்பு தான் தூண்டுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x