Published : 16 Nov 2019 04:48 PM
Last Updated : 16 Nov 2019 04:48 PM

இரண்டாவது முறையாக சந்தானத்துடன் இணைந்த யோகி பாபு

சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படத்தில், காமெடியனாக யோகி பாபு நடிக்கிறார்.

எழுத்தாளர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘டிக்கிலோனா’. ‘பலூன்’ இயக்குநர் சினிஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை, கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதில், ஹீரோவாக சந்தானம் நடிக்கிறார். அதுவும் மூன்று வேடங்களில். பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், இந்தப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். காமெடியனாக யோகி பாபு நடிக்கிறார். இதன்மூலம் ‘டகால்டி’ படத்தைத் தொடர்ந்து சந்தானம் - யோகி பாபு இருவரும் இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கின்றனர்.

அனகா, ஷிரின் ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடிக்கும் இந்தப் படத்தில், ஆனந்த் ராஜ், முனீஸ்காந்த், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், ஷா ரா, அருண் அலெக்ஸாண்டர், நிழல்கள் ரவி, இட் ஈஸ் பிரசாந்த் ஆகியோரும் நடிக்கின்றனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தை, அடுத்த வருடம் (2020) ஏப்ரல் மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x