Published : 15 Nov 2019 18:03 pm

Updated : 15 Nov 2019 18:03 pm

 

Published : 15 Nov 2019 06:03 PM
Last Updated : 15 Nov 2019 06:03 PM

கார்த்தி - ஜோதிகா இணையும் 'தம்பி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

karthi-starring-thambi-first-look-released

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா இணைந்து நடித்துள்ள 'தம்பி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கைதி'. இந்தப் படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்தை முடித்துவிட்டு, ஒரேகட்டமாக ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான படத்தை முடித்தார் கார்த்தி.

இதன் படப்பிடிப்பு கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட மலைப் பிரதேசங்களில் நடைபெற்றது. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்துள்ளார். இந்தப் படத்தில் கார்த்தியுடன் முதல் முறையாக ஜோதிகா இணைந்து நடித்துள்ளார். சத்யராஜ், நிகிலா விமல் உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்குப் பெயரிடப்படாமலேயே இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தையும் முடித்தது படக்குழு. தற்போது 'தம்பி' எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்தப் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

சீமான் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'தம்பி'. அந்தப் படக்குழுவினருடன் தலைப்பு உரிமையை வாங்கி, இந்தப் படத்துக்கு வைத்துள்ளனர்.

இதன் பணிகள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டு, தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் 'சுல்தான்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் கார்த்தி.


தம்பிகார்த்திஜோதிகாஇயக்குநர் ஜீத்து ஜோசப்சத்யராஜ்தம்பி ஃபர்ஸ்ட் லுக்கைதி வெற்றி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author