Published : 31 Oct 2019 08:09 PM
Last Updated : 31 Oct 2019 08:09 PM

வைபவ் - வாணி போஜன் நடிக்கும் ‘லாக்கப்’

நிதின் சத்யா தயாரிப்பில் வைபவ் நடித்து வந்த புதிய படத்துக்கு 'லாக்கப்' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.

குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், சில படங்களில் நாயகனாகவும் நடித்து வந்தவர் நிதின் சத்யா. கடந்தாண்டு ஜெய் நடிப்பில் வெளியான 'ஜருகண்டி' என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தற்போது தனது இரண்டாம் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஜெயம் ராஜாவிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்த எஸ்.ஜி.சார்லஸ் இந்தப் புதிய படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். வைபவ், வாணி போஜன், ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி, வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஷ்வேத் நிதின் சத்யா’ நிறுவனம் மூலம் நிதின் சத்யா தயாரித்து வருகிறார்.

க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்துக்கு 'லாக்கப்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. அரோல் கரோலி இசையமைத்து வருகிறார். விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x