Published : 26 Oct 2019 04:35 PM
Last Updated : 26 Oct 2019 04:35 PM

கே.எஸ்.ரவிக்குமார் - பாலகிருஷ்ணா இணையும் 'ரூலர்': போஸ்டர் வெளியீடு

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நாயகனாக நடிக்கும் 'ரூலர்' படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஹாப்பி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாராகும் இந்தப் படம் பாலகிருஷ்ணாவின் 105-வது படம். 2018ல் ரவிக்குமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்து வெளியான 'ஜெய் சிம்ஹா' திரைப்படம் வெற்றிப் படமாக அமைந்தது. இதன் பிறகு பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான 'என்.டி.ஆர்' பயோபிக் இரண்டு பாகங்களும் மோசமான விமர்சனங்களை சந்தித்ததோடு படுதோல்வி கண்டது.

தற்போது தனது புகழையும், பாக்ஸ் ஆபிஸ் வசூலையும் மீட்டெடுக்கும் முயற்சியில் மீண்டும் கே.எஸ்.ரவிக்குமாருடன் இணைந்துள்ளார் பாலகிருஷ்ணா. 'ரூலர்' படத்தில் பாலகிருஷ்ணா போலீஸ் சீருடையில் கையில் சுத்தியிலுடன் இருக்கும் முதல் பார்வை போஸ்டரும், மோஷன் போஸ்டரும் வெளியாகியுள்ளது.

சோனல் சவுகான் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்துக்கு சிரந்தன் பட் இசையமைக்கிறார். டிசம்பர் 20 அன்று படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x