Published : 10 Oct 2019 08:56 PM
Last Updated : 10 Oct 2019 08:56 PM

அஜித் செய்த பிரியாணி; போட்டோ ஷுட் : ஸ்ருதி ஹாசன் பகிர்வு

தனக்காக அஜித் செய்த போட்டோ ஷுட், பிரியாணி உள்ளிட்டவை குறித்து ஸ்ருதி ஹாசன் நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

தமிழில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் 'லாபம்' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாசன். இதனைத் தொடர்ந்து புதிதாகத் தமிழில் வேறு எந்தவொரு படத்திலுமே ஒப்பந்தமாகவில்லை. இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் நடிப்பதற்குப் பல கதைகளையும் கேட்டு வருகிறார் ஸ்ருதிஹாசன்.

இதனிடையே லட்சுமி மஞ்சு நடத்தும் 'Feet up with Stars' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார்கள். இதில் ஸ்ருதி ஹாசனும் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் சில புகைப்படங்களை ஸ்ருதி ஹாசனிடம் காண்பித்து, அது தொடர்பான அனுபவங்களைச் சொல்ல வைத்தார் லட்சுமி மஞ்சு. அவர் காண்பித்த புகைப்படங்கள் ஸ்ருதி ஹாசனை 'வேதாளம்' சமயத்தில் அஜித் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படமும் காண்பிக்கப்பட்டது.

அந்த புகைப்படம் குறித்து ஸ்ருதி ஹாசன், "இது மிகவும் விசேஷமான புகைப்படம். இது ’வேதாளம்’ படப்பிடிப்பின் போது அஜித் அவர்கள் எடுத்தது. அவர் அற்புதமான கருப்பு வெள்ளைப் புகைப்படங்கள் எடுப்பார். அப்படி அவர் எடுத்த பல புகைப்படங்களில் ஒன்று.

ஸ்ருதி புகைப்படம் எடுக்கலாமா என்று அனுமதி கேட்டார். நான் சரி என்றதும் எடுத்தார். என் புகைப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்த புகைப்படங்கள் சில அஜித் எடுத்ததுதான். மிக மிக நல்ல மனிதர். ஒட்டுமொத்த படப்பிடிப்புக் குழுவுக்கும் சமைத்துக் கொடுப்பார். அற்புதமாகச் சமைப்பார்.

ஒரு முறை பிரியாணி செய்தபோது நான் டயட்டில் இருப்பதாகச் சொன்னேன். பரவாயில்லை, உனக்கு மீன் பிடிக்குமா என்று கேட்டார். பிடிக்கும் என்றேன். உடனே எனக்காகவே விசேஷமாக மீன் சமைத்து, அதைச் சுற்றி இலைகள், சட்னி என்று செய்து கொடுத்தார்” என்று தெரிவித்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x