Published : 04 Oct 2019 08:28 AM
Last Updated : 04 Oct 2019 08:28 AM

இசையமைப்பதற்கு இடையூறு செய்வதாக பிரசாத் ஸ்டுடியோ ஊழியர் மீது இளையராஜா புகார்

சென்னை

இசையமைப்பதற்கு இடையூறு செய்வதாக பிரசாத் ஸ்டுடியோ ஊழியர்கள் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் இளைய ராஜா சார்பில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.

சென்னை வடபழனி குமரன் காலனியில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் ஓர் இடத்தை வாடகைக்கு எடுத்து இசையமைப்பாளர் இளையராஜா பயன் படுத்தி வருகிறார். கடந்த 40 ஆண்டுகளாக இளையராஜா அந்த ஸ்டுடியோவில் வைத்து திரைப்படங்களுக்கான ஒலிப்பதிவு (ரெக்கார்டிங்) பணிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் தனது குழுவில் உள்ளவர்கள், தாங்கள் பயன்படுத்தும் இசைக் கருவிகளையும் இங்கேயே வைத்துவிட்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில், இளையராஜா இசை அமைப்பு பணிகளை செய்யும்போது, ஸ்டுடியோ ஊழியர்கள் சிலர் வேண்டுமென்றே இடையூறு செய்யும் நோக்கில் செயல்படுவதாகவும், மேஜைகள், கணினிகள் போன்ற அலுவலக பொருட்களை ரெக்கார்டிங் ஸ்டுடியோ அருகிலேயே வைத்து வழியை அடைப்பதாகவும், இங்கு வைக்கப்பட்டுள்ள இசைக் கருவிகளுக்கு சேதம் ஏற்படுத்தும் நோக்கிலும், ரெக்கார்டிங் ஸ்டுடி யோவை ஆக்கிரமிக்கும் நோக்கி லும் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகி கள் மற்றும் ஊழியர்கள் செயல் படுவதாகவும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் இளைய ராஜா சார்பில் புகார் கொடுக்கப் பட்டுள்ளது.

இளையராஜாவின் உதவி யாளர் கஃபார், விருகம்பாக்கம் காவல் நிலையத்துக்கு தபால் மூலம் இந்த புகாரை அளித்துள் ளார். புகாரை பெற்றுக்கொண்ட விருகம்பாக்கம் போலீஸார், இந்த புகார் இளையராஜா தரப்பில் இருந்துதான் கொடுக்கப் பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொண்டு, விசாரணையை தொடங்கியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x