Published : 25 Aug 2019 09:21 am

Updated : 25 Aug 2019 09:23 am

 

Published : 25 Aug 2019 09:21 AM
Last Updated : 25 Aug 2019 09:23 AM

திரை விமர்சனம்- பக்ரீத்

bakrid-review

திட்டமிட்டோ, எதிர்பாராமலோ வீட்டில் இருந்து வெளியேறும் முதன்மைக் கதா பாத்திரங்கள் மேற்கொள்ளும் பயண மும் பயண வழியின் எதிர்பாராத தருணங் கள் தரும் தரிசனமும் பயணத் திரைப் படங்களின் வசீகரமான அம்சங்கள்.

ஆசையாய் வளர்த்த ஒட்டகத்தைப் பிரியும் நோக்குடன் ஓர் ஏழை விவசாயி அதனுடன் மேற்கொள்ளும் பயண வழியின் அனுபவங்களே ‘பக்ரீத்’ திரைப்படம்.


ஏழு வருடம் இழுத்தடிக்கப்பட்ட வழக் கின் முடிவில், எளிய விவசாயியான ரத்தினத் துக்கு அவனுக்குரிய நிலம் கிடைக்கிறது. அதில் பயிரிட கடனுக்காக அலையும் அவனது முயற்சியில், பணத்தோடு சேர்ந்து ஓர் ஒட்டகமும் கைக்குக் கிடைக்கிறது. ‘சாரா’ எனப் பெயர் சூட்டி, அதன் மீது பாசத்தைக் கொட்டுகிறது ரத்தினத்தின் குடும்பம். பிள்ளைபோல் பழகிவிட்ட அந்த ஒட்டகத்தின் உடல்நிலை ஒருநாள் பாதிக்கப்படுகிறது. ஒட்டகம் வாழ, அதன் பூர்வீக இடத்துக்கு அதை அழைத்துச் சென்று விட்டுவர முடிவெடுத்துக் கிளம்புகிறான் ரத்தினம். அந்தப் பயணம் எப்படி அமைந்தது, ரத்தினத்தின் நோக்கம் நிறைவேறியதா? இல்லையா என்பது மீதிக் கதை.

இணையத் திரைப்படமாக வெளியான ‘சிகை’ படத்தை எழுதி, இயக்கிய ஜெகதீசன் சுபு, இயக்கியிருக்கும் இரண்டாம் படம்.

மாடுகளும் ஆடுகளும் நிறைந்த மருத நிலப் பரப்புக்குள் வாழும் சிறு விவசாயக் குடும்பத்துக்குள் நுழையும் ஒட்டகத்தை ஊரே ஆச்சரியமாகப் பார்க்கும் முரண் பகடியோடு படம் சூடுபிடிக்கத் தொடங்கு கிறது. ஒட்டகத்துக்கும், பின்னர் ரத்தினம் வாங்கிவரும் உழவு மாடுகளுக்கும் தங்கள் வீட்டுப் பிள்ளைகள்போல் பெயர் சூட்டி மகிழும் அந்தக் குடும்பம், ஒட்டகம் என்ன சாப் பிடும் எனத் தெரியாமல் வைக்கோலையும் கேழ்வரகு ரொட்டியையும் கொடுப்பது, இந்திமொழி புரிந்து சாப்பிடும் என்று நம்பி, இந்திக்காரர் ஒருவரை அழைத்துவந்து பேச வைப்பது என அன்பின் மிகுதியில் வழிந்தோடும் கிராமியத்தின் அறியா மையை மெல்லிய நகைச்சுவையாக இழையோடவிட்டிருக்கிறார் இயக்குநர்.

படத்தின் முதல் சிக்கல், ரத்தினத்தின் குடும்பத்துக்கும் ஒட்டகத்துக்குமான நெருக் கத்தை, பார்வையாளர்களுக்கும் ஒட்டகத் துக்குமான நெருக்கமாக இயக்குநர் கடத் தத் தவறியிருப்பது. உணவிடுவது, பராம ரிப்பது, மாட்டுப் பொங்கலின்போது அதைக் கொண்டாடுவது என மேலோட்டமான காட்சித் துண்டுகளால் கடந்து சென்று விடுகிறார். இதனால் ஒட்டகம் தொலைந்த பிறகு ரத்தினம் காட்டும் பதற்றமும், அது பண்டிகைக்கு விருந்தாகிவிடும் என்று அவர் புதிதாகத் தெரிந்துகொண்டவர் போல் பதற்றப்படும் இடமும் நம்மைப் பாதிக்கவில்லை. அதேபோல் கடன் வாங்க வந்த இடத்தில் ஒட்டகக் குட்டியைப் பார்த்ததும், அதை, தான் கொண்டுபோய் வளர்ப்பதாகச் சொல்கிறார் ரத்தினம். அவர் அப்படி முடிவெடுத்ததற்கான காரணமும் வலுவாக இல்லை.

படத்தின் பிரதானமான பகுதி, ரத்தினம் தனது ஒட்டகத்துடன் ராஜஸ்தான் புறப்பட்ட பிறகே தொடங்குகிறது. வாழ்க்கை குறித்த அனுபவப் பாடத்தைச் சொல்ல ஏராளமான வாய்ப்புள்ள இப்பகுதியைக் கையாண்ட விதத்தில் இயக்குநர் சறுக்கியிருக்கிறார். லாரி ஓட்டுநர், அவரது உதவியாளர் உடனான தோழமை, பசு நேசர்கள் காட்டும் ‘பேரன்பு’, கால்களை நம்பும் வெளிநாட்டுப் பயணி, முயல்வேட்டைக்கு வந்து, மனிதர்களைச் சுடும் துடுக்குத்தனமான இளைஞர்கள் எனப் பயண வழியில் ரத்தினம் எதிர்கொள் ளும் தருணங்கள் கலவையான உணர்வு களால் திணறடிக்கின்றன.

ரத்தினம், விக்ராந்த்துக்குப் பெயர் பெற் றுத் தரும் கதாபாத்திரம். மிகவும் தணிவான, கனிவான குரலிலேயே பேசுகிறார். ரத்தினத் தின் மனைவி கீதாவாக வரும் வசுந்தரா, அவரது மகள் வாசுகியாக வரும் சிறுமி ஷ்ருத்திகா உள்ளிட்ட துணைக் கதாபாத் திரங்கள் படத்தை உணர்வுபூர்வமாக நகர்த்திச் செல்ல உதவியிருக்கின்றன.

மகள் ஆசையுடன் கேட்கும் ஒரு குறிப் பிட்ட பிராண்ட் சிப்ஸை வாங்கித் தந்தும், அதைத் தின்னவிடாமல் அழகாக ஏமாற்றும் கிராமத்துப் பெற்றோரின் அக்கறை ரசிக்க வைக்கிறது. ஒரு குறிப்பிட்ட பிராண்ட் சிப்ஸை இயக்குநர் நேரடியாகக் காட்டி யிருப்பதும், அதைத் தணிக்கை அனுமதித்து இருப்பதும் ஆச்சரியம், அதிசயம்.

இஸ்லாமியர்களைத் தொடர்ந்து தீவிரவாதியாகச் சித்தரித்துவந்த தமிழ்ப் படப் போக்கில் இருந்து விலகி, அவர்களை சராசரி மனிதர்களாக, நல்லுணர்வு கொண்ட வர்களாகச் சித்தரித்திருக்கும் எதார்த்தம் வரவேற்கத்தக்கது.

விவசாயக் கிராமம் என்றவுடன் மதுரை, நெல்லை, தஞ்சை எனச் செல்லாமல் சென்னையின் திருவள்ளூர் மாவட்டப் பசுமையைக் கொட்டித் தந்திருக்கிறார் ஒளிப் பதிவையும் கவனித்திருக்கும் இயக்குநர் சுபு. மகாராஷ்டிரா, ராஜஸ்தானையும் கதைக்குத் தேவையான அளவு பரந்த நிலக்காட்சிகளாகக் கொடுத்த விதம் ஒன்ற வைக்கிறது.

இமானின் பின்னணி இசை, படத்துக்கு உதவவில்லை என்றாலும் ‘ஆலங்குருவி களா’, ‘கரடு முரட்டு பூவே’ ஆகிய பாடல் கள் நெகிழச் செய்கின்றன.

மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடை யிலான பேரன்பைச் சொல்லும் பெருவழிப் பயணமாக அமைந்திருக்க வேண்டிய ‘பக்ரீத்’, போதாமைகளின் பயணமாகத் தட்டுத் தடுமாறினாலும் மனிதநேயத்தை உணர்வுபூர்வமாகப் பதித்த வகையில் குழந்தைகளுடன் கண்டுகளிக்க இப்படத் துக்கு இதயத்தில் தரலாம் ஓர் இடம்.

அன்பு வாசகர்களே....


வரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசைதிரை விமர்சனம்பக்ரீத்Bakrid review

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author