Published : 14 Aug 2019 21:21 pm

Updated : 15 Aug 2019 14:57 pm

 

Published : 14 Aug 2019 09:21 PM
Last Updated : 15 Aug 2019 02:57 PM

ஜீவா - ரத்ன சிவா இணையும் சீறு

jiiva-new-film-titled-as-seeru

ரத்ன சிவா இயக்கத்தில் ஜீவா நடித்து வரும் படத்துக்கு 'சீறு' என தலைப்பிட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

'ஜிப்ஸி', 'கொரில்லா' ஆகிய படங்களை முடித்துவிட்டு, ரத்ன சிவா இயக்கத்தில் உருவான படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார் ஜீவா. இதனை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி பல்வேறு ஊர்களில் நடைபெற்றது.

நவ்தீப், சதீஷ், ரியா சுமன் உள்ளிட்ட பலர் இதில் ஜீவாவுடன் நடித்துள்ளனர். இமான் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு பிரசன்ன குமார் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்துள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தப் படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

'சீறு' என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவித்துள்ளது படக்குழு. முழுக்க கமர்ஷியல் பாணியில் இந்தப் படத்தை உருவாக்கியிருப்பது போஸ்டர் வடிவமைப்பைப் பார்க்கும் போது தெரிகிறது.

தற்போது இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டு, இந்தியில் ரன்வீர் சிங்குடன் நடித்து வரும் '83' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ஜீவா.


ஜீவாசீறுசீறு ஃபர்ஸ்ட் லுக்இமான்

You May Like

More From This Category

More From this Author