செய்திப்பிரிவு

Published : 12 Aug 2019 12:41 pm

Updated : : 12 Aug 2019 13:57 pm

 

நான் பார்த்த அற்புதமான நடிகர்: விஜய் சேதுபதியைப் புகழ்ந்த ஷாரூக்

you-are-most-wonderful-actor-seen-in-my-life-sharukh-khan-praised-vijay-sethupathy

என் வாழ்க்கையில் நான் பார்த்த அற்புதமான நடிகர் நீங்கள் என்று பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் விஜய் சேதுபதியைப் புகழ்ந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் இந்தியத் திரைப்பட விழா ஆகஸ்டு 8-ம் தேதி தொடங்கி வரும் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மொழிகளைச் சேர்ந்த திரைப்படங்கள் இடப்பெற்றுள்ளன.

ஷாரூக் கான், கரண் ஜோஹர், விஜய் சேதுபதி, தபு, காயத்ரி, அர்ஜூன் கபூர், தியாகராஜன் குமாரராஜா ஆகியோர் இத்திரைப்பட விழாவில் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பைப் பலரும் பாரட்டினர். இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பு குறித்து பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஷாரூக் கான் பேசும்போது, “ என் வாழ்க்கையில் நான் பார்த்த அற்புதமான நடிகர் நீங்கள்” என்று விஜய் சேதுபதியைப் பாராட்டி அவரைக் கட்டியணைத்தார்.

ஷாருக் கான்விஜய் சேதுபதிசிறந்த நடிகர்ஆஸ்திரேலியாதிரைப்பட விழாவிருதுசூப்பர் டீலக்

Popular Articles

You May Like

More From This Category

More From this Author