Published : 05 Aug 2019 09:49 AM
Last Updated : 05 Aug 2019 09:49 AM

கொடுமைக்கு ஆளாகும் பெண்ணின் மனநிலையில் இருந்தேன்- ஷ்ரத்தா ஸ்ரீநாத் நேர்காணல்

கா.இசக்கிமுத்து

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில், முக் கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். தமிழ் திரையுலகில் அறிமுக மாகி குறுகிய காலத்திலேயே அஜித்துடன் நடித்திருப்பதை தனக்கு கிடைத்த மாபெரும் வாய்ப்பு என்று சிலிர்ப்புடன் கூறிவருகிறார். அவருடன் ஒரு நேர்காணல்..

‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் அஜித் உங்களைப் பார்த்து, ‘‘கன்னித்தன்மை யுடன்தான் இருக்கிறீர்களா?’ என்று கேட்கும் காட்சி, டிரெய்லரில் இடம்பெறு கிறது. இதற்கு, உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் ஏதும் சொன்னார்களா?

இதில் தவறு இல்லை என்பது என் கருத்து. அந்த காலம் கடந்துவிட்டது. இதுபோன்ற விஷயங்களை பேசாமலே இருப்பதுதான் பிரச்சினைகளை உருவாக்குகிறது. எனவே, இதை நானும் பிரச்சினையாக கருதவில்லை. என் வீட்டிலும் எதுவும் கூறவில்லை.

‘பிங்க்’ படம் பார்த்ததில்லை என்று கூறியிருந்தீர்கள். இப்போது பார்த்துவிட்டீர்களா?

சில காட்சிகள் பார்த்தேன். இப்படத்தை பார்ப்பவர்கள் இந்தியில் தாப்ஸியின் நடிப்பை யும், தமிழில் என் நடிப்பையும் ஒப்பிட்டுப் பேசுவார்கள். இந்தி இயக்குநர் சொன்னபடி தாப்ஸி நடித்துள்ளார். தமிழ் இயக்குநர் வினோத் சொன்னபடி, உள்வாங்கிக்கொண்டு நான் நடித்துள்ளேன். அவ்வளவுதான். ஒப்பீட் டுக்கு தயாராக இருக்கிறேன். ‘நேர்கொண்ட பார்வை’ வெளிவந்த பிறகு, ஒருநாள் உட்கார்ந்து முழு படத்தையும் பார்க்கணும்.

‘பிங்க்’ படக் கதாபாத்திரத்தில் இருந்து வெளியே வர நீண்ட நாட்கள் ஆனதாக தாப்ஸி கூறியுள்ளார். நீங்கள்?

அது ரொம்ப அழுத்தமான, வலுவான கதா பாத்திரம். நடிக்கும்போது கடினமாக உணர்ந் தேன். நீதிமன்றக் காட்சிகளுக்காக பதற்றப் பட்டேன். அந்த உணர்ச்சிகள் எல்லாம் சேர்ந்து மிகப்பெரிய அழுத்தமாக மாறியது. கடைசிக் காட்சி படப்பிடிப்பு முடிந்து ‘டேக் ஓ.கே’ சொன்னவுடன், மாபெரும் பணியை செய்து முடித்த திருப்தியோடு, கேரக்டரில் இருந்து உடனே வெளியே வந்துவிட்டேன்.

அஜித்துடன் நடித்த அனுபவம்?

சிறந்த மனிதர். ஒரு காட்சிக்கு ரீ-டேக் போய்விட்டால்கூட, செட்டில் அனைவரிடமும் ஸாரி கேட்பார். ‘‘ஷ்ரத்தாஜீ! ஸாரி.. நான் அதிக ரீ-டேக் எடுக்கிறேன்’’ என்பார். அவ்வ ளவு பெரிய நடிகர் என்னிடம் இதை சொல்ல அவசியம் இல்லை. மனதளவில் தங்கமாக இருப்பவர்களால் மட்டுமே இது சாத்தியம்.

‘பிங்க்’ படத்தில் அதிர்ச்சியை தருவது காரில் நடக்கும் வன்கொடுமை காட்சி. தமிழில் படமாக்கும்போது எப்படி உணர்ந்தீர்கள்?

உண்மையிலேயே பாலியல் துன்புறுத்தல் நடக்கும் நிலையில், ஒரு பெண்ணின் மன நிலை, பதற்றம் எப்படி இருக்குமோ, அப்படி தான் இருந்தேன். அதில் நடித்த ஆண்கள் பாவம். படப்பிடிப்பில் ‘ஸாரி ஷ்ரத்தா’ என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஒவ் வொரு டேக் எடுத்த பிறகும், ‘ரொம்ப கடினமா நடந்துக்கிட்டேனா, ஸாரி சிஸ்டர்!’ என்பார்கள். ‘நடிப்புதானே, பிரச்சினையில்லை’ என்று கூறுவேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x