Last Updated : 21 Jul, 2015 12:51 PM

 

Published : 21 Jul 2015 12:51 PM
Last Updated : 21 Jul 2015 12:51 PM

விஜய் படத்தில் வில்லனாக நடிக்க பாரதிராஜா, சத்யராஜ் மறுப்பு

அட்லீ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க இயக்குநர் பாரதிராஜா மற்றும் சத்யராஜ் இருவரையும் அணுகியபோது மறுத்துவிட்டார்கள்.

விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், ராதிகா, இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படத்தை அட்லீ இயக்கி வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்தை தாணு தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. விஜய் படத்தில் தன்னுடைய முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்ததாக சமீபத்தில் ராதிகா அறிவித்திருக்கிறார்.

முதலில் விஜய்க்கு வில்லனாக எதாவது புதிய வில்லனை நடித்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்திருக்கிறது படக்குழு. இதற்காக இயக்குநர் பாரதிராஜாவை முதலில் அணுகி இருக்கிறார்கள். "என்னது வில்லனா? மணிரத்னம் படம், சுசீந்திரன் படம் வித்தியாசமான வேடங்கள் என்பதால் நடித்தேன். விஜய்க்கு வில்லன் எல்லாம் வாய்ப்பே இல்லை" என்று பாரதிராஜா மறுத்துவிட்டார்.

பாரதிராஜாவைத் தொடர்ந்து சத்யராஜை அணுகி இருக்கிறார்கள். அவரோ "'நண்பன்' படத்தில் விஜய்யோடு வித்தியாசமான பாத்திரத்தில் நடித்தேன். ரஜினிக்கு வில்லன் என்று கேட்டபோதே மறுத்துவிட்டேன். வில்லன் எல்லாம் வேண்டாம்" என்று தெரிவித்திருக்கிறார்.

பாரதிராஜா மற்றும் சத்யராஜ் இருவரும் மறுத்தவுடன், இயக்குநர் மகேந்திரனை வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x