Published : 18 Mar 2015 08:34 AM
Last Updated : 18 Mar 2015 08:34 AM

பழம்பெரும் திரைப்பட நடன இயக்குநர் உடுப்பி ஸ்ரீலஷ்மி நாராயணன் சென்னையில் காலமானார்

பழம்பெரும் திரைப்பட நடன இயக்குநர் உடுப்பி லஷ்மி நாராயணன்(90) நேற்று காலமானார்.

உழைக்கும் கரங்கள், சரஸ்வதி சபதம், கௌரவம், காதலன் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றியவர் உடுப்பி  லஷ்மி நாராயணன். எம்.ஜி.ஆர், நடிகர் சிவாஜி கணேசன் ஆகியோரின் அன்பை பெற்ற நடன இயக்குநராக திகழ்ந்தவர். சிவாஜி கணேசன் தொடங்கிய நாடக மன்றத்தில் நடன ஆசிரியராக இருந்தவர்.

1962-ம் ஆண்டு சென்னையில் `நாட்டிய மஞ்சரி’ பள்ளியை தொடங்கி பல மேடை நாடகங்களை அரங்கேற்றியவர். காஞ்சிபுரம் எல்லப்ப முதலியாரிடம் முறையே பரதநாட்டியம் பயின்றவர். நடிகர் பிரபுதேவா, நடன இயக்குநர் ராஜூசுந்தரம் ஆகியோர் இவரிடம் பயின்றவர்கள்.

சமீபகாலமாக லஷ்மி நாராயணனுக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டது. உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து நேற்று அவர் காலமானார். அவரது உடல் அஞ்சலிக்காக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு லீலாவதி என்ற மனைவியும், பிரபாவதி, கலாவதி, ஹேமாவதி, மதுமதி ஆகிய மகள்களும், முரளி கிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர். இறுதிச் சடங்குகள் இன்று காலை சென்னை விருகம்பாக்கத்தில் நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x