Published : 03 Mar 2015 10:15 AM
Last Updated : 03 Mar 2015 10:15 AM
ஹைதராபாத்தில் வரும் 21-ம் தேதி தொடங்க இருந்த முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் வரும் மே மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் நகரில் ரூ.17, 000 கோடி செலவில் 71 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக நாகோலு-மெட்டகூடாஇடையிலான 8 கிலோமீட்டர் தூரத்துக்கான முழு பணிகளும் முடிவடைந்துள்ளது.
இதையடுத்து, வரும் 21-ம் தேதி மெட்ரோ ரயில் தொடக்க விழா நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சில தொழில் நுட்ப காரணங்களுக்காக இதை ஒத்தி வைத்திருப்பதாகவும், வரும் மே மாதம் தொடக்க விழா நடைபெறும் என்றும் மெட்ரோ ரயில் திட்ட நிர்வாக இயக்குநர் எஸ்.வி.எஸ். ரெட்டி நேற்று தெரிவித்தார்.