Last Updated : 16 Feb, 2015 12:16 PM

 

Published : 16 Feb 2015 12:16 PM
Last Updated : 16 Feb 2015 12:16 PM

மீண்டும் ஒரு காதல் கதை ஆகிறது தட்டத்தின் மறையத்து

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'தட்டத்தின் மறையத்து' திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படத்துக்கு 'மீண்டும் ஒரு காதல் கதை' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் 'தட்டத்தின் மறையத்து'. இப்படத்தின் தமிழ் ரீமேக் படப்பிடிப்பு நடைபெற்றாலும், யாரெல்லாம் நடிக்கிறார்கள், தலைப்பு என்ன உள்ளிட்ட விஷயங்களை அறிவிக்காமல் இருந்தார்கள்.

தற்போது இப்படத்திற்கு 'மீண்டு ஒரு காதல் கதை' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். நாயகனாக புதுமுகம் கெளதம் நடிக்க, நாயகியாக 'தட்டத்தின் மறையத்து' நாயகி இஷா தல்வார் நடித்து வருகிறார். நாசர், தலைவாசல் விஜய், சிங்கமுத்து உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். 'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் இப்படத்தையும் இயக்கி வருகிறார்.

இப்படம் நடுத்தர வர்க்கத்து இந்துப் பையன் வசதியான முஸ்லிம் பெண்ணை விரும்புகிறான். அவர்களுக்கிடையே அரும்பும் காதல் , இருவரும் ஒன்று சேர வரும் எதிர்ப்புகள், தடைகள் பற்றியது தான் கதைக்களம்.

கன்னியாகுமாரியில் தான் கதைக்களம் நடக்கிறது என்றாலும் சென்னை, கோவை, கேரளா, தலச்சேரி போன்ற இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. படத்தைத் பிளாக் டிக்கெட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை தாணு வாங்கி வெளியிடுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x