Published : 15 Feb 2015 11:59 AM
Last Updated : 15 Feb 2015 11:59 AM

வங்கி மோசடி வழக்கில் நாளிதழ் உரிமையாளர் கைது

வங்கி மோசடி வழக்கில் டெக் கான் கிரானிக்கிள் நாளேட்டின் உரிமையாளர் டி.வெங்கடராம் ரெட்டி ஹைதராபாதில் நேற்று சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப் பட்டார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கனரா வங்கி கொடுத் திருந்த புகாரின் பேரில் இந்த மோசடி வழக்கு பதிவு செய்யப் பட்டிருந்தது.

இந்நிலையில் பெங்களூரு வில் இருந்து, வங்கி மோசடி குறித்து விசாரிக்கும் சிபிஐ சிறப்புக்குழுவினர் நேற்று காலை டெக்கான் கிரானிக்கிள் அலுவலகம் வந்தனர். வெங்கட

ராம் ரெட்டியை விசாரணைக்காக கோட்டி என்ற இடத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு அழைத் துச் சென்றனர். ரூ. 400 கோடி மோசடிப் புகார் தொடர்பாக நீண்ட விசாரணைக்குப் பின், அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இத்தகவலை நகர காவல்துறை உயரதி காரிகள் தெரிவித்தனர்.

டெக்கான் கிரானிக்கிள் ஹோல்டிங்ஸ் நிறுவனம் (டிசிஎச்எல்) சார்பில் டெக்கான் கிரானிக்கிள், பைனான்ஷியல் கிரானிக்கிள், ஏசியன் ஏஜ் ஆகிய 3 ஆங்கில நாளிதழ்கள், ஆந்திர பூமி என்ற தெலுங்கு நாளேடு ஆகியவை வெளிவருகின்றன. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 2-வது சீசனில் வென்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் உரிமை இந்த நிறுவனத்தின் வசம் இருந் தது. பின்னர் இதன் உரிமையை இந்த நிறுவனம் இழந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x