Last Updated : 04 Jan, 2015 11:29 AM

 

Published : 04 Jan 2015 11:29 AM
Last Updated : 04 Jan 2015 11:29 AM

விஜய் - சிம்புதேவன் இணையும் புலி- அதிகாரபூர்வ அறிவிப்பு

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் பெயர் 'புலி' என அதிகார்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படத்தை சிம்புதேவன் இயக்கி வருகிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வரும் இப்படத்தை தமீன் பிலிம்ஸ் மற்றும் பி.டி.செல்வக்குமார் இணைந்து தயாரித்து வருகிறார்கள். நட்டி ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

ஈ.சி.ஆர் சாலையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து இப்படத்தின் பாடல் மற்றும் சண்டைக்காட்சியை படமாக்கினார்கள். படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சமயத்தில் 'மாரீசன்', 'கருடா', 'போர்வாள்' என பல்வேறு தலைப்புகள் செய்திகளாக இணையத்தில் வெளிவந்த வண்ணம் இருந்தன.

ஆனால், படக்குழு இன்னும் படத் தலைப்பு எதையும் இறுதி செய்யவில்லை. பொங்கல் அன்று படத் தலைப்பு வெளியிடப்படும் என்று அறிவித்திருத்தார்கள்.

இந்நிலையில், இன்று விஜய் - சிம்புதேவன் படத்தின் தலைப்பு 'புலி' என்று இறுதிசெய்யப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் படத்தை ஒரே சமயத்தில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x