Last Updated : 16 Jan, 2015 06:26 PM

 

Published : 16 Jan 2015 06:26 PM
Last Updated : 16 Jan 2015 06:26 PM

ஆஸ்கர் 2015 பரிந்துரைகள்: பேர்ட்மேன், தி கிராண்ட் புடாபெஸ் ஹோட்டல் ஆதிக்கம்



87-வது ஆஸ்கர் அகாடமி விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில், அலெஜான்ட்ரோ கோன்ஸலெஸ் இனாரிட்வின் இயக்கத்தில் மைக்கேல் கீடோன் நடித்துள்ள பிளாக் காமெடி படம் 'பேர்ட்மேன்' மற்றும் வெஸ் ஆண்டர்சன் இயக்கத்தில் ரல்ஃபா ஃபியென்னஸ் நடித்துள்ள 'தி கிராண்ட் புடாபெஸ் ஹோட்டல்' ஆகிய படங்கள் தலா 9 பிரிவுகளில் இடம்பெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளன.

ஆஸ்கர் விருதுக்கான இறுதி பரிந்துரைப் பட்டியல், கலிபோர்னியாவின் பேவெர்லி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள சாமுவேல் கோல்ட்டுவின் நிகழ்கலையரங்கத்தில் வெளியிடப்பட்டது.

ரஹ்மானுக்கு வாய்ப்பில்லை

இம்முறை இந்தியாவில் இருந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட எவரும் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறவில்லை. | விரிவான செய்தி:>ஆஸ்கர் 2015 பரிந்துரைப் பட்டியலில் இந்தியாவுக்கு ஏமாற்றம்

ஆஸ்கர் விருதுகள், பிப்ரவரி 22-ல் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் கண்கவர் வண்ணமிகு நட்சத்திர விழாவில் வழங்கப்படுகின்றன.

இம்முறை முதன்முதலாக 24 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளுக்கான பெயர்கள் நேரடியாக பரிந்துரைக்கப்படுவதாக அகாடமி இயக்குநர்கள் ஜே.ஜே. ஆப்ராம்ஸ், அல்ஃபோன்சோ கியூரான், நடிகர் கிரீஸ் பைன் மற்றும் அகாடமி குழுத் தலைவர் சார்ல பூனே இஸாக்ஸ் ஆகியோர் இணைந்து அறிவித்துள்ளனர். இரு பிரிவாக இந்த நிகழ்ச்சி பிரிக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

'தி இமிட்டேஷன் கேமியா' அசத்தல்

'தி இமிட்டேஷன் கேமியா' திரைப்படம் மட்டும் 8 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கிளிண்ட் ஈஸ்ட்வுட் இயக்கிய 'அமெரிக்கன் ஸ்னீப்பர்' திரைப்படமும் 'பாய்ஹூட்' திரைப்படமும் தலா 6 விருதுகள் பெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

சிறந்த திரைப்படத்துக்கான விருதைப் பெறுவதில் 'அமெரிக்கன் ஸ்னீப்பர்', 'பேர்ட்மேன்', 'பாய்ஹூட்', 'தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல்', 'தி இமிட்டேஷன் கேம்', 'செல்மா', 'தி தியரி ஆப் எவ்வரிதிங்' மற்றும் 'விப்லாஷ்' ஆகிய படங்களுக்கு இடையே போட்டி பலமாக உள்ளது.

அதேபோல சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெறுவதிலும் இனாரிட்டு (பேர்ட்மேன்), ரிச்சர்ட் லிங்க்லேட்டர் (பாய்ஹூட்) பென்னட் மில்லர் (பாக்ஸ்கேட்சர்), ஆன்டர்சன் (தி புடாபெஸ்ட் ஹோட்டல்) மற்றும் மார்டென் டில்டெம் (தி இமிட்டேஷன் கேம்) ஆகிய இயக்குநர்களுக்கிடையில் கடும் போட்டி உள்ளது.

சிறந்த நடிகர் போட்டி

சிறந்த நடிகருக்கான விருது இம்முறை 'ஃபாக்ஸ் கேட்சரி'ல் முக்கியப் பாத்திரம் ஏற்று நடித்த ஸ்டீவ் கரேல், அமெரிக்கான் ஸ்னீப்பரில் நடித்துள்ள பிராட்லி கூப்பர், 'தி இமிட்டேஷன் கேம்' மில் நடித்துள்ள பெனிடிக்ட் கும்பெர்பேட்ச், 'பேட்மேனி'ல் நடித்துள்ள கீட்டோன், 'தி தியரி ஆப் எவ்வரிதிங்' படத்தில் நடித்துள்ள எடீ ரெட்மேய்னே ஆகியோரிடையே போட்டி நிலவுகிறது.

சிறந்த நடிகை போட்டி

சிறந்த நடிகைக்கான விருதினைத் தட்டிச்செல்ல இம்முறை காத்திருப்பவர்களில் 'டு டே ஒன் நைட்' திரைப்படத்தில் நடித்த மேரியன் கோடிலார்டு, 'தி தியரி ஆப் எவ்வரிதிங்'கில் நடித்துள்ள பெலிசிடி ஜோன்ஸ், 'ஸ்டில் அலைஸ்' திரைப்படத்தில் நடித்த ஜூலியன் மூர்ரே, 'கோன் கேர்ல்' திரைப்படத்தில் நடித்த ரோசாமண்ட் பைக் மற்றும் 'வொயில்ட்' திரைப்படத்தில் நடித்த ரீஸ் விதர்ஸ்பூன் ஆகிய நடிகைகள் முன்னணியில் உள்ளனர்.

உறுதுணை நடிகர், நடிகையர் போட்டி

சிறந்த உறுதுணை நடிகருக்கான விருதைப் பெறுவதில் 'தி ஜட்ஜ்' திரைப்படத்தில் நடித்த ரோபர்ட் டூவல், 'பாய்ஹூட்' படத்தில் நடித்த எதான் ஹாவ்கே, 'பேர்ட்மேன்' படத்தில் நடித்துள்ள எட்வர்ட் நோர்டான், 'ஃபாக்ஸ்கேட்சரி'ல் நடித்துள்ள மார்க் ரஃபாலோ மற்றும் 'விப்லாஷ்' படத்தில் நடித்துள்ள ஜே.கே.சிம்மோன்ஸ் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

அதேபோல சிறந்த உறுதுணை நடிகைக்கான விருது 'பாய்ஹூட்' படத்தில் நடித்த பேட்ரிசியா ஆர்கொய்ட்டே, 'வொயில்ட்' படத்தில் நடித்துள்ள லாரா டெர்ன், 'தி இமிடேஷன் கேம்'மில் நடித்துள்ள கெய்ரா நைட்லீ 'பேர்ட்மேன்' படத்தில் நடித்துள்ள எம்மா ஸ்டோன் மற்றும் 'இன்டூ த டோர்ஸ்' படத்தில் நடித்துள்ள மேரில் ஸ்ட்ரீப் ஆகியோரில் ஒருவருக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

இசைப் பிரிவு

சிறந்த இசையமைப்பாளருக்கான விருது பெறுவதில் 'தி கிராண்ட் புடாபெஸ்ட்' ஹோட்டல், 'தி இமிடேஷன் கேம்' ஆகிய படங்களுக்கு இசையமைத்த அலெக்சாண்டர் டெஸ்ப்லாட், 'இன்டர்செல்லர்' படத்திற்கு இசையமைத்த ஹான்ஸ் சிம்மர், 'மிஸ்டர் டர்னர்' படத்திற்கு இசையமைத்த கேரி யேர்ஷான், 'தி தியரி ஆஃப் எவ்வரிதிங்' படத்திற்கு இசையமைத்த ஜோஹான் ஜோஹான்சன் ஆகியோரிடையே போட்டி நிலவுகிறது.

அதேபோல திரைப்படங்களில் இடம்பெற்ற சிறந்த பாடலுக்கு இசையமைத்ததற்கான விருதினைப் பெறுவதில் 'எவ்வரிதிங் இஸ் ஆசம்' பாடல் இடம்பெற்ற தி லெகோ மூவி திரைப்படத்தில் இசையமைத்த ஷான் பேட்டர்சன், குளோரி பாடலுக்கு இசையமைத்த 'செல்மா' இசையமைப்பாளர்கள் ஜான் ஸ்டீபன்ஸ் மற்றும் லோனி லின், 'பியாண்ட்த லைட்ஸ்' படத்தில் கிரேட்ஃபுல் பாடலுக்கு இசையமைத்த டையானே வாரன், க்ளேன் காம்ப்பெல், 'ஐ வில் பி மீ' திரைப்படத்தில் இடம்பெற்ற ஐ யம் நாட் கன்னா மிஸ் யூ பாடலுக்கு இசையமைத்த க்ளேன் காம்பெல் மற்றும் ஜூலியன் ரேமன்ட் மற்றும் 'பிகன் எகெய்ன்' படத்தில் லால்ன்ஸட் ஸ்டார்ஸ் பாடலுக்கு இசையமைத்த கிரெக் அலெக்சாண்டர் மற்றும் டேனியலெ பிரெசபாய்ஸ் ஆகியோரிடையே போட்டி நிலவுகிறது.

சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படப் பிரிவு

சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதுபெற 'இடா' (போலந்து), 'லிவியாதன்' (ரஷ்யா), 'டாங்கெரீனெஸ்' (ஈஸ்டோனியா), 'டிம்பக்த்வா' (மாரிடோனியா) மற்றும் 'வொய்ல்ட் டேல்ஸ்' (அர்ஜெண்டீனா) ஆகிய படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

சிறந்த நேரடியாக படமாக்கப்பட்ட குறும்படத்திற்கான விருது பெற அயா, பூகாலூ அன்ட் க்ரஹம், பட்டர் லேம்ப், பார்வனே மற்றும் தி போன்கால் ஆகிய படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மற்ற பிரிவுகள்:

சிறந்த விஷுவல் எஃபக்ட்டுகள் பிரிவு விருது இம்முறை 'கேப்டன் அமெரிக்கா: தி விண்டர் சோல்ஜர்', 'டான் ஆப் தி பிளானெட் ஆப் த ஆப்ஸ்', 'கார்டியன்ஸ் ஆப் த கேலக்ஸி', 'இன்டர்செல்லர்', 'எக்ஸ்-மேன்: டேஸ் ஆப் த பியூச்சர் பாஸ்ட்' ஆகிய படங்களிலிருந்து ஒரு திரைப்படம் தேர்வாக உள்ளது.

நாவல்களைத் தழுவி எழுதப்பட்ட சிறந்த திரைக்கதைக்கான விருதுப் பிரிவில் 'அமெரிக்கன் ஸ்னீப்பர்', 'இன்ஹியரென்ட் வைஸ்', 'தி தியரி ஆப் எவ்வரிதிங்', 'விப்லாஷ்' ஆகிய திரைப்படங்களும், சிறந்த ஒரிஜனல் திரைக்கதைக்கான விருதுப் பிரிவில் 'பாய்ஹூட்', 'ஃபாக்ஸ்கேட்சர்', 'தி கிராண்ட், புடாபெஸ்ட் ஹோட்டல்', 'நைட்கிராவ்லெர்' ஆகிய திரைப்படங்களும் போட்டியிடுகின்றன.

சிறந்த அனிமேஷன் திரைப்பட உருவாக்கத்திற்கான விருதுப் பிரிவில் 'பிக் ஹீரா 6எ', 'தி பாக்ஸ்ட்ரோல்ஸ்', 'ஹவ் டூ ட்ரெயின் இவர் ட்ராகன் 2', 'சாங் ஆப் தி ஸீ' மற்றும் 'தி டேல் ஆப் தி பிரின்சஸ் காகுயா' ஆகிய திரைப்படங்களும், சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான விருதுப் பிரிவில் 'தி பிக்கர் பிக்ட்சர்', 'தி டாம் கீப்பர்', 'ஃபீஸ்ட்', 'மீ அன்ட் மை மௌல்டன்' மற்றும் 'ஏ சிங்கிள் லைஃப்' ஆகிய திரைப்படங்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது பெறுவதற்காக இம்மானுவேல் லூபெஸ்கி (பேர்ட்மேன்), ராபர்ட் யெயோமேன் (தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல்), லூகாஸ் ஸால் மற்றும் ரிஸ்ஸார்டு லென்ச்வ்ஸ்கி (இடா), டிக் போப் (மிஸ்டர் டர்னர்) மற்றும் ரோஜர் டீக்கின்ஸ் (அன்புரோக்கன்) ஆகிய ஒளிப்பதிவாளர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

சிறந்த ஆடை வடிவமைப்புப் பிரிவில் சாதனை புரிந்ததற்காக தங்கச் சிலையை வெல்வதும் ஆஸ்கர் விருதுத் தேர்வில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. 'தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல்' திரைப்படத்தில் பணியாற்றிய மில்லெனோ கானோனெரோ, 'இன்ஹியரென்ட் வைஸ்' படத்தில் பணியாற்றிய மார்க் பிரிட்ஜஸ் 'இன்டூ த வுட்ஸ்' படத்தில் பணியாற்றிய கொலீன் ஆட்வூட், 'மாலேஃபிசியண்ட்' படத்தில் பணியாற்றிய அன்னா பி ஷெப்பர்ட் மற்றும் ஜேனே க்ளைவ் மற்றும் 'மிஸ்டர் டர்னர்' திரைப்படத்தில் ஜாக்கூலீன் டூரான் ஆகியோர் சிறந்த ஆடை வடிவமைப்புப் பிரிவில் விருதுபெற பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.



சிறந்த தயாரிப்பு நிர்வாகத்தை திட்டமிட்டு வடிவமைத்ததற்கான 'தயாரிப்பு வடிவமைப்பு' பிரிவில் வழங்கப்படும் விருதுக்காக 'தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல்', 'தி இமிடேஷன் கேம்', 'இன்டர்செல்லர்', 'இன்டூ த வுட்ஸ்' மற்றும் 'மிஸ்டர் டர்னர்' திரைப்படங்கள் முன்னணியில் நிற்கின்றன.

சிறந்த டாக்குமெண்டரி திரைப்படத்திற்காக தேர்வுக்குழுவினர் பரிந்துரைத்துள்ள பட்டியலில் 'சிட்டிஸன்ஃபோர்', 'ஃபைண்டிங் விவியான் மய்யெர்', 'லாஸ்ட் டேஸ் இன் வியட்நாம்', 'தி சால்ட் ஆப் த எர்த்', மற்றும் 'விருங்கா' ஆகிய படங்களும் சிறந்த குறும்படத்திற்கான விருது பெற 'கிரைஸிஸ் ஹாட்லைன்: வெட்டரன்ஸ் பிரஸ் 1', 'ஜோயன்னா', 'அவர் கோர்ஸ்', 'தி ரீப்பர் (லா பர்கா)' மற்றும் 'வொய்ட் எர்த்' ஆகிய படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

சிறந்த திரைப்பட படத்தொகுப்புக்கான விருதுப் பிரிவில் இந்த முறை ஜோயல் காக்ஸ் மற்றும் கேரி டி. ரோச் ஆகியோர் 'அமெரிக்கன் ஸ்னீப்பரு'க்காகவும் 'பாய்ஹூட்' படத்திற்காக சாந்த்ரா அடாய்ரும் 'தி புடாபெஸ்ட் ஹோட்டல்' திரைப்படத்திற்காக பெர்னேய் பில்லிங்கும் 'தி இமிட்டேஷன் கேம்' படத்திற்காக வில்லியம் கோல்டன்பெர்க், 'விப்லாஷ்' திரைப்படத்திற்காக டாம் க்ராஸ் ஆகியோர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

சிறந்த ஒப்பனைக்கலைஞர் மற்றும் கூந்தல் அலங்காரத்திற்காக வழங்கப்படும் ஆஸ்கர் விருது பெறுவதில் பில் கார்ஸோ மற்றும் டேனிஸ் லிட்டீயர்டு (ஃபாக்ஸ்கேட்சர்), பிரான்சஸ் ஹனான் மற்றும் மார்க் கூலியர் (தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல்) மற்றும் எலிசபெத் வியீயானி-ஜியார்ஜியோ மற்றும் டேவிட் வொய்ட் (கார்டியன்ஸ் ஆப் த கேலக்ஸி) ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

சிறந்த ஒலித் தொகுப்புக்காக ஆலன் முர்ரே மற்றும் பப் ஆஸ்மான் (அமெரிக்கன் ஸ்னீப்பர்), மார்டீன் ஹெர்னான்டெஸ் மற்றும் ஆரோன் க்ளாஸ்காக் (பேர்ட்மேன்), பிரெண்ட் பர்கெ மற்றும் ஜாஸன் கானோவாஸ் (தி ஹாப்பிட்: தி பாட்டில் ஆப் த பைவ் ஆர்மீஸ்) ரிச்சர்ட் கிங் (இன்டர்செல்லர்), மற்றும் பெக்கி சல்லிவன் மற்றும் ஆண்ட்ரூ டெக்ரிஸ்டோஃபாரோ (அன்புரோக்கன்) ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

ஒலிக் கலவை (சவுண்ட் மிக்ஸிங்) பிரிவில் அமெரிக்கன் ஸ்னீப்பர், பேர்ட்மேன், இன்டர்ஸ்டெல்லர், அன்ப்ரோக்கன் மற்றும் விப்லாஷ் ஆகிய படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x