Last Updated : 30 Nov, 2014 11:33 AM

 

Published : 30 Nov 2014 11:33 AM
Last Updated : 30 Nov 2014 11:33 AM

தீவிரவாத அமைப்பில் சேர்ந்ததாக குற்றச்சாட்டு: நாடு திரும்பிய இளைஞருக்கு டிச. 8 வரை காவல்

ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்து போரிட்டதாக குற்றம் சாட்டப் பட்டுள்ள மும்பை இளைஞர் ஆரிப் மஜீதை டிசம்பர் 8 வரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) போலீ ஸாரின் காவலில் வைத்து விசாரிக்க என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

முன்னதாக, ஐஎஸ் அமைப்பில் சேர்ந்தது, இராக், சிரியாவில் போரில் பங்குபெற்றது உள்ளிட்ட விவரங் களைக் கண்டறிய முனைந்துள்ளதாக என்ஐஏ தரப்பில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.தேஷ்முக்கிடம் தெரிவிக்கப்பட்டது.

ஐநா தடை செய்துள்ள ஐஎஸ் அமைப்பில் மஜீத்துடன் சேர்ந்து பிற 3 இளைஞர்களும் தேடப்பட்டனர்.

ஐஎஸ் தீவிரவாத படையில் சேர்வதற்கு முன்பு மஜீத்துக்கு கொடுக்கப் பட்ட பயிற்சி பற்றி ஆராய விரும்புவ தாகவும் என்ஐஏ தரப்பு வழக்கறிஞர் நீதிபதியிடம் கூறினார். இதனிடையே, என்ஐஏ மீது சொல்லக் கூடிய அளவுக்கு புகார் ஏதாவது இருக்கிறதா என மஜீத்திடம் நீதிபதி கேட்டபோது இல்லை என்றார் அந்த இளைஞர். முன்னதாக நீதிபதி, பெயரை கேட்டபோது தனது பெயர் மஜீத் என்றார்

23 வயதுடைய மஜீத் மும்பைக்கு வெள்ளிக்கிழமை வந்து சேர்ந்தபோது கைது செய்யப்பட்டார். இந்தியாவுடன் உறவு வைத்துள்ள ஆசிய நாட்டுக்கு எதிராக போரிட்டதாகக் கூறி சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஐஎஸ் அமைப்பு, மஜீத், பிற 3 இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பொறியியல் பட்டதாரிகளான இந்த 4 இளைஞர்களும் கடந்த மே 23-ம் தேதி இராக்கில் உள்ள புனிதத் தலங்களை பார்ப்பதற்காக பாக்தாத் சென்ற 22 பயணிகள் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

அடுத்த தினமே பாக்தாத்தில் இருந்து தனது குடும்பத்தினரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய ஆரிப், சொல்லாமல் வீட்டை விட்டு வந்துவிட்டதாகவும் நாடு திரும்ப உள்ளதாகவும் தன்னை மன்னிக்கும் படியும் கேட்டுள்ளார்.

உளவுத் துறை இயக்குநர் எச்சரிக்கை

அசாம் மாநிலம் குவாஹாட்டியில் நடந்த காவல்துறை தலைவர்கள் மாநாட்டில் மத்திய உளவுத் துறை இயக்குநர் ஆசிப் இப்ராஹிம் பேசியதாவது:

லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய தீவிரவாத அமைப்புகள் இந்தியாவுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளன. ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இந்திய இளைஞர்கள் இணைவதும் அங்கிருந்து நாடு திரும்புவதும் இப்போது புதிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. காஷ்மீர் மக்கள் தீவிரவாதத்தைப் புறக்கணித்துள்ளனர். அந்த மாநில சட்டப்பேரவை தேர்தலில் வாக்கு சதவீதம் கணிசமாக அதிகரித்திருப்பது இதனை உணர்த்துகிறது என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x