Last Updated : 28 Mar, 2017 04:21 PM

 

Published : 28 Mar 2017 04:21 PM
Last Updated : 28 Mar 2017 04:21 PM

அஜித்தின் திறமைகள்: வியக்கும் காஜல் அகர்வால்

அஜித்துடன் 'விவேகம்' படத்தில் முதல்முறையாக இணைந்து நடித்துவருகிறார் காஜல் அகர்வால். அவருடனான ஒரு சந்திப்பு.

அஜித் பற்றி கூறுங்கள்?

'விவேகம்' அழகான கதையைக் கொண்ட படம். அற்புதமான மனிதரான அஜித்துடன் நடிப்பதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். அவர் திறமைகளின் குவியல். அவருடன் விவேகம் படத்தில் இணைந்துள்ளது உண்மையிலேயே அதிக சந்தோஷத்தை அளிக்கிறது.

உங்களின் கதாபாத்திரம் குறித்து?

நான் அசல் தமிழ்ப் பெண்ணாக நடித்திருக்கிறேன். படம் கணவன் - மனைவிக்கு இடையிலான உறவைப் பற்றி பேசுகிறது. படத்தின் அனைத்து கலைஞர்களும் சிறப்பாகப் பணிபுரிந்துள்ளனர். விரைவில் பல்கேரியாவின் நடக்கவுள்ள கடைசிக்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளேன்'' என்கிறார்.

'விவேகம்' படத்தை சிவா இயக்க, சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

'கத்தி' பட தெலுங்கு ரீமேக்கான 'கைதி எண் 150' படத்தின் வெற்றியில் 2017-ம் ஆண்டைத் தொடங்கிய காஜல் தொடர்ந்து பேசுகிறார்.

'கைதி எண் 150' அனுபவம் எப்படி இருந்தது?

சிரஞ்சீவி உடன் நடித்தது புதிய அனுபவத்தைக் கொடுத்தது. அவர் ஒரு மேதை. விஜயின் நடிப்பில் 'கத்தி' படத்தை அனைவரும் ரசித்தனர். தெலுங்கு ரீமேக்கான 'கைதி எண் 150'-ல் நான் நடித்ததை எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகக் கருதுகிறேன்.

சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகின்றன. எப்படி உணர்கிறீர்கள்?

மிகச் சிறப்பான விஷயம் இது. இத்தனை ஆண்டுகளில் ஏராளமானவற்றைக் கற்றிருக்கிறேன். எக்கச்சக்கமான அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன.

திரை வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் இருந்திருக்கிறது. தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டேன். ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போதும் என்னை மெருகேற்றிக்கொள்ள முயற்சிக்கிறேன்.

அட்லீ இயக்கத்தில் விஜயுடன் மூன்றாவது முறையாக இணைந்து நடிக்கிறீர்கள்...

ஆம், பெண்களின் கதாபாத்திரத்தை அற்புதமாக வடிவமைப்பதில் அட்லீ கைதேர்ந்தவர். அவரின் நாயகிகள் திறமை வாய்ந்தவர்களாகவும், நல்ல மனிதர்களாகவும் இருப்பார்கள். என்னுடைய கதாபாத்திரமும் நன்றாகச் செதுக்கப்பட்டுள்ளது. திரையில் முற்றிலும் வேறு மாதிரியான காஜலைக் காணப் போகிறீர்கள்.

'துப்பாக்கி', 'ஜில்லா'வுக்குப் பிறகு விஜயுடன் 3வது முறையாக இணைந்து நடிக்கிறேன்'' என்கிறார் காஜல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x