Last Updated : 31 Aug, 2017 12:10 PM

 

Published : 31 Aug 2017 12:10 PM
Last Updated : 31 Aug 2017 12:10 PM

விவேகம் விமர்சன சர்ச்சை: பாடகர் ஸ்ரீனிவாஸ் தனது பதிவை நீக்கியதற்கான காரணம் என்ன?

'விவேகம்' விமர்சன சர்ச்சை குறித்த பாடகர் ஸ்ரீனிவாஸின் தனது ஃபேஸ்புக் பதிவை நீக்கியதற்கான காரணம் என்ன என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் 'விவேகம்' பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியானது. இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன. இதில் மாறன் என்பவரது விமர்சனம் திரையுலகினர் மத்தியில் கடும் அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது.

மாறனின் விமர்சனத்துக்கு திரையுலகினர் பலரும் சமூகவலைத்தளத்தில் தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த சர்ச்சைக் குறித்து பாடகர் ஸ்ரீனிவாஸ், மாறன் விமர்சனத்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்து பதிவொன்றை வெளியிட்டார்.

ஸ்ரீனிவாஸின் ஃபேஸ்புக் பதிவு அஜித் ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கியது. மேலும், இதர நடிகர்களின் ரசிகர்கள் அவரது பதிவை பகிர்ந்தும், ஆதரவும் தெரிவித்து வந்தார்கள்.

இந்நிலையில், 'விவேகம்' விமர்சனம் குறித்த தனது பதிவை நீக்கியுள்ளார் பாடகர் ஸ்ரீனிவாஸ். இது குறித்து விசாரித்த போது, "விமர்சனம் செய்வது அனைவருக்குமே உரிமையுண்டு என்பதால் அக்கருத்தைத் தெரிவித்திருந்தார். ஆடியோ வடிவில் அஜித்தை கடுமையாக சாடியிருந்தது ஸ்ரீனிவாஸிற்கு தெரியாது.

அஜித் குறித்த மாறனின் ஆடியோ பேச்சை பலரும் ஸ்ரீனிவாஸிற்கு அனுப்பி வைத்தார்கள். அதைக் கேட்டவர் விமர்சகரின் பேச்சு மிகவும் தவறானது என்பதை அறிந்து தனது பதிவை நீக்கியுள்ளார். தொடர்ச்சியாக அவருடைய பதிவு இருந்தால், பலரும் தவறாக புரிந்து கொள்வார்கள் என்பதே காரணம். படத்தை மட்டுமே விமர்சனம் செய்ய வேண்டும், தனி மனித தாக்குதல் என்பது தவறு தான்" என்று தெரிவித்தார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x