Last Updated : 24 Aug, 2017 12:02 PM

 

Published : 24 Aug 2017 12:02 PM
Last Updated : 24 Aug 2017 12:02 PM

அஜித் ரசிகர்களுக்கு விசேஷமான தினம்: விவேகம் குறித்து கிரிக்கெட் வீரர் அஸ்வின்

அஜித் ரசிகர்களுக்கு விசேஷமான தினம் என்று 'விவேகம்' படம் குறித்து கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் 'விவேகம்' பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று (ஆகஸ்ட் 24) வெளியாகியுள்ளது. அதிகாலை காட்சியிலிருந்தே தமிழக திரையரங்குகளில் அஜித் ரசிகர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.

மேலும், பல தமிழ் திரையுலகினரும் படக்குழுவினருக்கு தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்றிரவு (ஆகஸ்ட் 23) கூறியிருப்பதாவது:

சென்னை திரையரங்குகளுக்கு வெளியே மிகப்பெரிய கூட்டத்தை எதிர்பார்க்கிறேன். நானும் நாளை விவேகம் பார்ப்பேன் என நம்புகிறேன். அஜித் ரசிகர்களுக்கு விசேஷமான தினம்

இவ்வாறு கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x