Last Updated : 26 Aug, 2017 05:37 PM

 

Published : 26 Aug 2017 05:37 PM
Last Updated : 26 Aug 2017 05:37 PM

விவேகம் விமர்சன சர்ச்சை: ஜி.வி.பிரகாஷ் விளக்கம்

அஜித் நடிப்பில் வெளியாகியிருக்கும் 'விவேகம்' படத்தின் விமர்சன சர்ச்சை குறித்து ஜி.வி.பிரகாஷ் விளக்கமளித்துள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் 'விவேகம்' பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியானது. இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன. இதில் மாறன் என்பவரது விமர்சனம் திரையுலகினர் மத்தியில் கடும் அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது.

'விவேகம்' விமர்சன சர்ச்சை குறித்து ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் ஒரு படத்தில் கோடிக்கணக்கில் முதலீடு செய்கின்றனர். விமர்சனம் மூலம் ஒரு படத்தை தாழ்த்துவது நியாயமல்ல. ஒரு படம் வந்து குறைந்தது 3-4 நாட்களாவது காத்திருக்க வேண்டும். பார்க்க வேண்டுமா, வேண்டாமா என மக்கள் முடிவு செய்யட்டும். வசூலும் நிரூபிக்கும். யார் படமாக இருந்தாலும் சரி. நான் எனது துறையின் பின்னால் நிற்கிறேன்

இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x