Published : 27 May 2017 05:23 PM
Last Updated : 27 May 2017 05:23 PM
அஜித்துடன் நடித்து வரும் 'விவேகம்' திரைப்படம் த்ரில்லர் வகையைச் சார்ந்தது என்று விவேக் ஓபராய் தெரிவித்துள்ளார்.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'விவேகம்'. விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தின் பல்கேரியா படப்பிடிப்பு முடிந்து, சென்னை திரும்பியுள்ளது படக்குழு.
ஜுன், ஜுலை ஆகிய மாதங்களில் இறுதிகட்ட பணிகளை முடித்து ஆகஸ்ட் 10ம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள விவேக் ஓபராய் அளித்துள்ள பேட்டியில், "நான் என்னுடைய முதல் தமிழ் திரைப்படத்தில் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் அஜித்குமாருடன் நடித்து வருகிறேன். ஐரோப்பா முழுதும் படமாக்கப்பட்ட இத்திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டான ரூ.120 கோடியில் தயாராகி வருகிறது.
மொழிகள் எனக்கு எளிதாக வருகிறது. மொழியை எளிதில் கற்றுக் கொண்டு விடுகிறேன். தெலுங்கு படத்தில் நடித்தேன். ரத்த சரித்ரா படத்தில் ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்தேன், இப்போது தமிழ் படத்தில் நடிப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. அஜித் குமாருடன் பணியாற்றுவதை பெரிதும் நேசிக்கிறேன். இது பன்னாட்டு ஸ்பை த்ரில்லர் வகையறா படம். மிகவும் கூலான படமாக அமைந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT