Last Updated : 22 Jul, 2017 08:30 PM

 

Published : 22 Jul 2017 08:30 PM
Last Updated : 22 Jul 2017 08:30 PM

டிராபிக் ராமசாமி வாழ்க்கையைத் தழுவி திரைப்படம்: எஸ்.ஏ.சி திட்டம்

டிராபிக் ராமசாமி வாழ்க்கை வரலாற்றைத் தழுவிப் படமொன்றை இயக்க எஸ்.ஏ.சந்திரசேகர் திட்டமிட்டுள்ளார்.

'சட்டம் ஒரு இருட்டறை' படத்தில் தொடங்கி 'டூரிங் டாக்கீஸ்' வரை பல்வேறு வரவேற்பு பெற்ற படங்களை இயக்கியவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன். இவருக்கு சமீபத்தில் கீழே விழுந்ததில் அடிபட்டது. அதனைத் தொடர்ந்து வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார்.

தற்போது, டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையைத் தழுவி கதை ஒன்றை எழுதி வருகிறார் எஸ்.ஏ.சந்திரசேகரன். தமிழகத்தில் தற்போது பல்வேறு வழக்குகளில் போராட்டி வருபவர் டிராபிக் ராமசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கதையில் முழுக்க புதுமுகங்களை நடிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளார் எஸ்.ஏ.சி. இதற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x