Published : 26 Jul 2017 09:17 AM
Last Updated : 26 Jul 2017 09:17 AM

தொழிலாளர்கள் சம்பளம் நிர்ணயம்: திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் பெப்சிக்கு எதிராக நடவடிக்கை

திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்க ளுக்கு தேவையான தொழிலாளர் களை தாங்கள் நிர்ணயித்துள்ள சம்பளப்படி பணியமர்த்தலாம் என தயாரிப்பாளர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமான பெப்சியைச் சேர்ந்த சில அமைப்பு கள் தங்கள் தொழிலாளர் களுக்கான சம்பளத்தை தாங்களே நிர்ணயித்து, தயாரிப்பாளர்களை நிர்ப்பந்தப்படுத்தி வந்தனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

பேச்சுவார்த்தை

இந்நிலையில், தமிழ்த் திரைப் பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) இடையே தொழிலாளர் கள் சம்பளம் தொடர்பான பேச்சு வார்த்தை நேற்று நடந்தது.

இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

பெப்சியை சேர்ந்த சில அமைப்புகள் தன்னிச்சையாக செயல்பட்டு தயாரிப்பாளர் களுக்கு படப்பிடிப்புகளில் பொருளாதார இழப்பையும், பேச்சுவார்த்தை என்ற பெயரில் மன உளைச்சலையும் கொடுத்து வருகின்றனர்.

நிர்ப்பந்தம்

இதை பெப்சி கண்டுகொள்ளா மலும், தனிப்பட்ட முறையில் தயாரிப்பாளரை இழிவுபடுத் துவதை கண்டிக்காமலும் இருந்து வருகிறது. இதனால், அந்த அமைப்புகள் அராஜகமாக தங் கள் சம்பளத்தை நிர்ணயித்து தயாரிப்பாளர்களை நிர்ப்பந்தப் படுத்துகின்றனர்.

எனவே இனிமேலும் தயாரிப் பாளர்களை சங்கம் கைவிட முடியாது. சம்மேளனமோ, தொழி லாளர்களோ தயாரிப்பாளர்களின் எதிரிகள் அல்ல. உழைக்கும் தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்குவது தயாரிப் பாளர்களின் கடமை.

அதேவேளையில் அநியாய மான முறையில் தயாரிப்பாளர்கள் நஷ்டப்படுவதையும் ஏற்க முடியாது. இதைக் கருத்தில் கொண்டு தயாரிப்பாளர் சங்கம் நிர்ணயிக்கும் சம்பள பட்டி யல்படி தயாரிப்பாளர்கள் தங்க ளுக்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு சம்பளம் தர வேண்டும்.

மேலும் இன்று (25-ம் தேதி) முதல் தயாரிப்பாளர்கள் தங்களுக்கு உடன்படும் யாருட னும் தேவையான அளவில் ஆட்களை வைத்து வேலை செய்யும்படி தயாரிப்பாளர் சங்கம் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் வெளியிடப் பட்ட அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x