Last Updated : 16 Jul, 2017 05:30 PM

 

Published : 16 Jul 2017 05:30 PM
Last Updated : 16 Jul 2017 05:30 PM

ஐஐஎஃப்ஏ 2017 விருது: ஷாகித் கபூர், அலியாவுக்கு சிறந்த நடிப்புக்கான விருதுகள்- ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறப்பு விருது

2017-க்கான ஐஐஎஃப் விருது நிகழ்ச்சியில் சிறந்த நடிகர் நடிகையாக உட்தா பஞ்சாப்பில் நடித்த ஷாஹீத் மற்றும் அலியா பட் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறப்புவிருதை ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றுள்ளார்.

''உட்தா பஞ்சாப்'' எனும் இந்திப் படத்தில் இவர்கள் இருவரது நடிப்பும் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்திருந்ததால் இவ்விருது இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல இப்படத்தில் நடித்த தில்ஜித் தோசாஞ் சிறந்த அறிமுக நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.

''எந்த ஒரு படமும் சென்சார் போர்டிடம் போராடி பின்னர் பெரிய திரைக்கு வரவேண்டியுள்ளது. இவ்வகையில் மைய நீரோட்ட திரைப்பட கலைஞர்கள் சில ஆபத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது'' என ஷாஹித் மற்றும் அலியா இருவரும் உணர்ச்சிவசப்பட்டு இந்த விருது கிடைத்தது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இதேபோல ஒரு ட்விட்டர் நிலைத் தகவலை வெளியிட்டுள்ள தில்ஜித் தன்னை ஆதரிக்கும் ரசிர்களுக்கு நன்றிதெரிவித்துள்ளார்.

''என் ரசிர்களை நேசிக்கிறேன். இளநெஞ்சங்களே இதற்கெல்லாம் காரணம் நீங்கள்தான். ஐஐஎஃப்ஏ தேர்வுக்குழுவுக்கும் உட்தா பஞ்சாப் குழுவுக்கும் நன்றிகள்'' என்று ட்வீட்டியுள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மெட்லைப் ஸ்டேடியத்தில் சனிக்கிழமை இவ்விருது வழங்கும் விழாவில் பிரபல பாலிவுட் நடிகை காதரீனா கைஃப் சிறந்த நடிகருக்கான விருதை ஷாஹீத்துக்கு வழங்கினார். இவ்விழாவுக்கு வந்திருந்த பாலிவுட் கலைஞர் வருண் தவான் சிறந்த நடிகைக்கான விருதை அலியா பட்டுக்கு வழங்கப்படுவதாக அறிவித்தார்.

சிறந்த திரைப்படத்திற்கான விருது ''நீர்ஜா'' திரைப்படத்திற்கு சென்றது. இத்திரைப்படம் கராச்சியில் ஒரு விமானம் கடத்தப்பட்டபோது அதைக் காப்பாற்ற தன் வாழ்க்கையை இழந்த நீர்ஜா பானோத் என்பவரின் வாழ்க்கையின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது.

சிறந்த திரைப்படத்திற்கான விருது ''நீர்ஜா'' திரைப்படத்திற்கு சென்றது. இத்திரைப்படம் கராச்சியில் ஒரு விமானம் கடத்தப்பட்டபோது பயணிகளைக் காப்பாற்ற தன் உயிரை பறிகொடுத்த நீர்ஜா பானோத் என்பவரின் வாழ்க்கையின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது.

இவ்விழாவில் பெண்கள் பிரச்சனைகளைப் பேசும் ''பிங்க்'' திரைப்படத்திற்கு சிறந்த இயக்குநருக்கான விருதை வழங்க அநிருத்தா ராய் சவுத்ரி வந்திருந்தார். ''பிங்க்'' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த டாப்ஸீ பானுவுக்கு வுமன் ஆப் தி இயர் விருது வழங்கப்பட்டது.

ரஹ்மானுக்கு விருது

இவ்விழாவில் திரைத்துறையில் 25 ஆண்டுகால இசை பங்களிப்பு ஆற்றியதை அங்கீகரிக்கும் வகையில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. விருதை ஏற்றுக்கொண்ட ரஹ்மான் "மா துஜே சலாம்" பாடலிலிருந்து இரண்டு வரிகளை பாடினார்.

இவ்விழாவுக்கு மெட்லைப் அரங்கத்தில் அமெரிக்கவாழ் இந்தியர்களான என்ஆர்ஐ மக்கள் பெருமளவில் குழுமியிருந்தனர். வார இறுதியில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட அகாடமியின் ஐஐஏஎஃப் விருது விழா பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x