Last Updated : 23 Jul, 2017 02:18 PM

 

Published : 23 Jul 2017 02:18 PM
Last Updated : 23 Jul 2017 02:18 PM

சஞ்சய் தத்தை கடவுளாகச் சித்தரிக்க முயற்சி செய்யவில்லை: ரன்பீர் கபூர்

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் குறித்த வாழ்க்கைச் சித்தரிப்புத் திரைப்படம் நடிகரின் வாழ்வில் அவர் கண்ட ஏற்றம், இறக்கம் ஆகிய இரண்டையும் பேசுகிறது என்று ரன்பீர் கபூர் தெரிவித்துள்ளார்.

சஞ்சய் தத் தன் வாழ்க்கையைப் பற்றி ஒளிவு மறைவில்லாமல் கூறியதாகவும் அவரது வாழ்க்கை வரலாறு ஒரு நேர்மையான சித்திரமாகவே இருக்கும், “ அவர் இதில் போலியானவர் அல்ல, எனவே அவரை கடவுளாகக் காட்ட முயற்சி செய்யும் திரைப்படமல்ல இது” என்கிறார் ரன்பீர்.

“சஞ்சய் தத்தின் மனிதார்த்த பக்கத்தை காட்ட முயற்சி செய்கிறோம். அவருக்கு ஏற்பட்ட இடர்பாடுகள், உயர்வுகள், தாழ்வுகள், அவரது போராட்ட குணம், சிறையில் கழித்த நாட்கள், தீவிரவாத குற்றச்சாட்டு, அவரது போதை மருந்து பழக்கக் காலக்கட்டம், தன் முதல் திரைப்படம் வெளியாவதற்கு இரு நாட்களுக்கு முன்னால் ஏற்பட்ட அவரது தாயாரின் மரணத்தை அவர் எப்படி எடுத்துக் கொண்டார், தந்தையுடனான உறவு. அவரது வாழ்க்கையில் மனிதனாக பல இன்னல்களைச் சந்தித்துள்ளார்” என்றார் ரன்பீர் சிங்.

சஞ்சய் தத் பாத்திரத்தில் நடிக்கிறார் ரன்பீர். ராஜ்குமார் ஹிரானி இந்தப் படத்தை இயக்குகிறார். அபிஜித் ஜோஷி கதையமைத்துள்ளார்.

“சஞ்சய் தத் போல் தோற்றத்தை ஏற்படுத்துவது மிகவும் மேம்போக்கானது, மேக்-அப், கிராபிக்ஸ் ஆகியவை உள்ளன. அவரது உடல் மொழி, உணர்வுகள், குறிப்பிட்ட சூழலில் அவரது மனநிலை ஆகியவற்றை பிரதிபலிப்பதே கடினம்.

இந்த அனுபவம் எனக்கு புதிதாக இருந்தது, ரசிகர்கள் இதனை எப்படி வரவேற்கின்றனர் என்பதைப் பார்க்க ஆவலாக உள்ளேன், இந்தப் படம் சஞ்சய் தத் என்ற ஹீரோவைப் பற்றியதல்ல மாறாக அவரது வாழ்க்கையைப் பற்றியது. ஆனாலும் சில படங்களையும் தொட்டுள்ளோம்.

இந்தப் படத்தில் நர்கீஸாக மணீஷா கொய்ராலா, சுனில் தத்தாக பரேஷ் ராவல், தத்தின் தற்போதைய மனைவி மான்யதாவாக டயா மிர்சா ஆகியோர் நடிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x