Published : 04 Jan 2017 06:59 PM
Last Updated : 04 Jan 2017 06:59 PM

சென்னை திரைப்பட விழா | ஐனாக்ஸ்-2 | ஜன.5 | படக்குறிப்புகள்

சென்னை 14-வது சர்வதேச பட விழாவில் வியாழக்கிழமை (ஜன.5) ஐனாக்ஸ்-2 அரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 10.15 மணி | LA DANSEUSE / THE DANCER | DIR: STEPHANIE DI GIUSTO | FRANCE | 2016 | 108'

1887. அமெரிக்காவைச் சேர்ந்த லோயி ஃபுல்லரின் பின்புலம் கண்டிப்பாக அவரை பிரெஞ்சு பொற்காலத்தின் சின்னமாக மாறுவார் என சொல்லியிருக்காது. ஏன் பாரிஸ் ஆபராவில் ஆடுவார் என்று கூட எதிர்பார்த்திருக்க முடியாது. ஆனால், தனது முதுகுத்தண்டு உடைந்து விடும் அபாயத்திலும், தனது கண்கள் மேடை விளக்குகள் பாதிக்கப்படக் கூடும் என்ற நிலையிலும் நேர்த்தியாக நடனமாட வேண்டும் என்ற தனது தாகத்தை அவர் விடவில்லை. ஆனால் இஸடோரா டன்கன் என்கிற புகழை விரும்பும் இளம் மேதையை லோயி சந்தித்தபோது, அவரின் வீழ்ச்சி தீர்மானிக்கப்பட்டது.

பிற்பகல் 12.15 மணி | LE CIEL FLAMAD / FLEMIISH HEAVEN | DIR: PETER MONSAERT | BELGIUM | 2016 | 108'

மான்சாயெர்ட்டின் 2-வது திரைப்படமான இதில் இரட்டைக் கதைகள் பிணைக்கப்படுகின்றன. தனது தாயார் மோனிக்குடன் சேர்ந்து பிளெமிஷ்-பிரெஞ்சு எல்லையில் பாலியல் தொழில் விடுதி நடத்தி வருகிறார் சில்வி, இந்த விடுதி வீழ்ச்சியடைந்து வரும் சூழல். 6 வயது சிறுமி எலைன் தனது தாய் செய்து வரும் பாலியல் தொழில் குறித்து அறியாமல் வளர்க்கப்படுகிறாள். ஆனால் திடீரென எலைனுக்கும் ஏற்படுகிறது ஒரு பயங்கரம், அதனைச் சுற்றி எழும் உறவு, உணர்ச்சிச் சிக்கல்களே இத்திரைப்படத்தின் கதைக்களம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x