Published : 08 Jan 2017 06:14 PM
Last Updated : 08 Jan 2017 06:14 PM

சென்னை பட விழா | ஆர்கேவி | ஜன.9 | படக்குறிப்புகள்

சென்னை 14-வது சர்வதேச பட விழாவில் திங்கள்கிழமை (ஜன.9) ஆர்கேவி ஸ்டூடியோ அரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

பிற்பகல் 2.30 மணி | CENTER OF MY WORLD | DIR: JAKOB M.ERWA | GERMANY & AUSTRIA | 2016 | 115'

கோடைப் பயணத்துக்கு அப்பும் பில் வீடு திரும்பும்போது தனது அம்மா, மற்றும் ஒருவரை யொருவர் பேசிக்கொள்ளாத இரட்டை சகோதரிகள் கிளாஸ், டியான்னி ஆகியோரைக் காண்கிறான். கோடை விடுமுறையின் கடைசி நாட்களில் வீட்டுக்குப் போகும் எண்ணமே உருவாகாமல்தான் இருந்தான். மேலும் பில் தலைவலி காரணமாக தனது நண்பன் வீட்டுக்குத்தான் சென்றான். ஐஸ் க்ரீம் சாப்பிடுவது, உடை அணியும் விளையாட்டுக்கள் என பொழுதைக் கழித்தான். மீண்டும் பள்ளிக்கூடம் தொடங்கும்போது ஒரு புதிய மாணவன் அழகான தோற்றமும் மர்மமும் கொண்ட நிகோலஸ் வகுப்பறைக்குள் நுழைகிறான். ஸ்மிட்டனுக்கும், பில்லுக்கும்அவன் மீது ஒரு ஈர்ப்பு உருவாக பள்ளிமுடிந்ததும் அவன் செல்லும் பாதையின் பின்தொடர்ந்து செல்கின்றனர். அவனது உணர்வுகளை இவர்கள் புரிந்துகொள்ளும்போது ஒரு சுவாரஸ்யம உருவாகிறது.

*****

மாலை 4.30 மணி | MORE THAN I CAN RECOGNIZE | DIR: ALLAN RIBERIO | BRAZIL | 2015 | 82'

800 மீட்டர் சதுர பரப்பளவுக் கொண்ட அந்தத் தனிமையான கண்ணாடி அவருக்கு போதுமானதாக இல்லை. தன்னிடமிருந்து பிரிக்க முடியாத ஒரு துணையை தனது கலையில் அவர் கண்டறிக்கிறார். டேரலுக்கு படங்கள் இயக்குவதில் விருப்பம் இல்லை.

*****

மாலை 7.15 மணி | BORN IN 1987 | DIR: MAJID TAVAKKOLI | IRAN | 2016 | 80'

லட்சியக் கனவுகளையும் அபிலாஷைகளையும் கொண்ட இளம் ஈரானியர்களிடையே எழும் பிரச்சனைகளை இப்படம் அலசுகிறது. முக்கியமாக காதல் அவர்களின் வாழ்வில் எந்தளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை இயக்குநர் மஜீத் தவக்கொலி மிகச் சிறப்பாக இயக்கியுள்ளார். இத்தகைய எல்லோரும் அறிந்த ஒரு பிரச்சனைகளை இவர் தனித்துவமாக கையாண்டுள்ளார். ஒரு இளம் ஜோடி தங்களை மிகவும் செல்வந்தர்கள் போல பாவனை செய்துகொள்வதோடு தங்களின் நாட்களை டெஹ்ரானின் பணக்கார வட்டத்திலேயே உழல்கிறார்கள். சாகச விளையாட்டுகளாகவே நகைச்சுவையாக அமைக்கப்பட்டுள்ள இப்படம் எதிர்பாராத திருப்பங்களோடு நகர்கிறது. இறுதி திகிலோடு முடிவடைகிறது என்பதுதான் சஸ்பென்ஸ். இயக்குநர் தவக்கொலியின் மாஸ்டர்பீஸ் இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x