Published : 10 Jan 2017 09:35 PM
Last Updated : 10 Jan 2017 09:35 PM

சென்னை பட விழா | கேஸினோ | ஜன.11 | படக்குறிப்புகள்







சென்னை 14-வது சர்வதேச பட விழாவில் புதன்கிழமை (ஜன.11) கேஸினோ அரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »



காலை 10.00 மணி | INVISIBLE / INVISIBLE | DIR: DIMITRI ATHANITIS | GREECE | 2016 | 84'



தான் வேலை செய்யும் தொழிற்சாலையிலிருந்து முன்னறிவிப்பின்றி நீக்கப்படும் ஆரிஸ் அதிர்ச்சியடைகிறான். மீண்டும் பணியில் சேர செய்யும் முயற்சிகள் வீணாக, கோபத்தில் சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொள்ள முடிவு செய்கிறான். ஆரிஸின் முன்னாள் மனைவி, அவர்களின் 6 வயது மகனை ஆரிஸிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்லும்போது ஆரிஸின் முடிவு தீர்மானமாகிறது.



பிற்பகல் 12.00 மணி | WHY ME? / DE CE EU? | DIR: TUDOR GLURGIU | ROMANIA / BULGARIA / HUNGARY | 2015 | 130'



கிறிஸ்டியன், வளர்ந்து வரும் இளம் வழக்கறிஞர் தனது மூத்த வழக்கறிஞர் பெரிய ஊழல் வழக்கில் சிக்கிக்கொள்ள அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென முயற்சிக்கும் கதை. ஆனால் கிறிஸ்டியனை நேர்மையும் தொழில்தர்மமும் ஒரே நேரத்தில் குறுக்கும்நெடுக்குமாக வந்து ஆட்டிப்படைக்கிறது. வேறுவழியின்றி வழக்கை எடுத்து நடத்த முற்படும்போது அபாயமான பாதையில் அவன் பயனிக்கும் நிலை ஏற்படுகிறது.



பிற்பகல் 2.30 மணி | THE DANCER | LA DANSEUSE | DIR: STEPHANIE DI GIUSTO | FRANCE | 2016 | 108'



1887. அமெரிக்காவைச் சேர்ந்த லோயி ஃபுல்லரின் பின்புலம் கண்டிப்பாக அவரை பிரெஞ்சு பொற்காலத்தின் சின்னமாக மாறுவார் என சொல்லியிருக்காது. ஏன் பாரிஸ் ஆபராவில் ஆடுவார் என்று கூட எதிர்பார்த்திருக்க முடியாது. ஆனால், தனது முதுகுத்தண்டு உடைந்து விடும் அபாயத்திலும், தனது கண்கள் மேடை விளக்குகள் பாதிக்கப்படக் கூடும் என்ற நிலையிலும் நேர்த்தியாக நடனமாட வேண்டும் என்ற தனது தாகத்தை அவர் விடவில்லை. ஆனால் இஸடோரா டன்கன் என்கிற புகழை விரும்பும் இளம் மேதையை லோயி சந்தித்தபோது, அவரின் வீழ்ச்சி தீர்மானிக்கப்பட்டது.



மாலை 4.40 மணி | ON THE OTHER SIDE / S ONE STRANE | DIR: ZRINKO OGRESTA | CROATIA | 2016 | 85'



20 ஆண்டுகளுக்கு முன்பு வெஸ்னா தனது குடும்பத்தை ஜாக்ரெபிற்கு மாற்றுகிறாள். அதாவது இவர்கள் வாழ்க்கையை ஏறக்குறைய சிதைத்துச்சின்னாபின்னமாக்கும் சம்பவங்களிலிருந்து குடும்பத்தை நகர்த்திச் செல்கிறாள் வெஸ்னா. எனினும் எதிர்பாராத அழைப்பு ஒன்று அவள் இத்தனையாண்டுகளாக படாதபாடுபட்டு மறைத்த ரகசியத்தை மீண்டும் கொண்டு வருகிறது.



மாலை 7.00 மணி | THE SALESMAN / FORUSHANDE | DIR: ASGHAR FARHADI | IRAN | 125'



ரானாவும், எமாடும் மேடை நாடக நடிகர்கள். நொறுங்கி விழும் ஆபத்திருக்கும் தங்களது வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். தாங்கள் புதிதாக குடிபெயரப்போகும் வீட்டில், இதற்கு முன் இருந்த பெண் பாலியல் தொழில் செய்தவள் என்பது தெரியாமலேயே செல்கின்றனர். பாலியல் தொழில் செய்தவளின் வாடிக்கையாளன் ஒருவன் திடீரென ஒருநாள் அந்த வீட்டுக்கு வருகிறான். ரானா - எமாடின் அமைதியான வாழ்க்கை அன்றோடு ஒட்டுமொத்தமாக தலைகீழாகிறது. எ செபரேஷன் படத்தை இயக்கிய அஸ்கார் ஃபர்ஹாதியின் அடுத்த படைப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x