Last Updated : 28 Oct, 2015 09:42 AM

 

Published : 28 Oct 2015 09:42 AM
Last Updated : 28 Oct 2015 09:42 AM

அஜித் பற்றிய அவதூறு செய்தி: நடிகர் கருணாஸ் விளக்கம்

அஜித்தைப் பற்றி அவதூறாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்கள் வெளியிட்டதற்கு நடிகர் கருணாஸ் போலீஸ் புகார் அளிக்க இருக்கிறார்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணி சார்பாக போட்டியிட்டு துணைத் தலைவராக ஜெயித்திருக்கிறார் நடிகர் கருணாஸ். @actor_karunas என்ற பெயரில் ட்விட்டர் தளத்தில் இயங்கி வருகிறார்.

அவருடைய ட்விட்டர் பக்கத்தில், "நடிகர் சங்க கலை நிகழ்ச்சிகள் வெளிநாடுகளில் நடந்தால், அஜித்தை அழைப்பதில்லை,எந்த சிறு உதவிக்கும் அவர் வீட்டு வாசல் படியை மிதிக்கக் கூடாது" என்ற கருத்து வெளியிடப்பட்டது. இக்கருத்தால் பெரும் சர்ச்சை நிலவியது.

இந்நிலையில் இக்கருத்து குறித்து கருணாஸ் அளித்துள்ள விளக்கத்தில், "என்னுடைய ட்விட்டர் கணக்கில் நடிகர் அஜித்தை பற்றி நான் அவதூறாக செய்திகளை கூறியதாக இன்று செய்தி வெளிவந்திருக்கிறது. இது முற்றிலும் தவறான செய்தியாகும்.

யாரோ விஷமிகள் என்னுடைய ட்விட்டர் கணக்கில் இப்படி ஒரு தவறான முறையற்ற செய்தியை வெளியிட்டுள்ளனர். ஆரம்ப காலகட்டம் முதல் இன்று வரை நான் அனைத்து நடிகர் நடிகைகளுடன் நட்பாக பழகி வந்துகொண்டிருக்கிறேன்.

யார் மீதும் எனக்கு தனிப்பட்ட முறையில் விரோதமோ காழ்ப்புணர்ச்சியோ கிடையாது. இந்நிலையில் இப்படி ஒரு செய்தி வந்ததை அறியும் போது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. இது பற்றி நாளை கமிஷனரிடம் முறையாக புகார் அளிக்கவுள்ளேன்" என்று தெரிவித்திருக்கிறார் கருணாஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x