Last Updated : 24 Sep, 2016 05:31 PM

 

Published : 24 Sep 2016 05:31 PM
Last Updated : 24 Sep 2016 05:31 PM

சைத்தான் கா பச்சா நாயகியாக ரிஷி கண்ணா ஒப்பந்தம்

சித்தார்த் நாயகனாக நடித்து வரும் 'சைத்தான் கா பச்சா' படத்தின் நாயகியாக ரிஷி கண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

சித்தார்த் நாயகனாக நடித்து தயாரித்த படம் 'ஜில் ஜங் ஜக்'. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தனது அடுத்த படத்திற்கான தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

'கப்பல்' படத்தின் இயக்குநர் கார்த்திக் கிரிஷ் இப்படத்தை இயக்கி வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வந்தது. நாயகி ஒப்பந்தம் செய்யாமல், நாயகி இல்லாத காட்சிகளை படப்பிடிப்பு செய்து வந்தார்கள்.

50% படப்பிடிப்பு முடிவுற்று இருக்கிறது. தற்போது படத்தின் நாயகியாக ரிஷி கண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறது படக்குழு.

இப்படத்தில் சித்தார்த் ரவுடி கதாபாத்திரத்திலும், ரிஷி கண்ணா பேஷன் டிசைனராகவும் நடித்து வருகிறார். யோகி பாபு, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x