Published : 07 Jan 2017 17:08 pm

Updated : 16 Jun 2017 11:45 am

 

Published : 07 Jan 2017 05:08 PM
Last Updated : 16 Jun 2017 11:45 AM

சென்னை திரைப்பட விழா: ஜன.8-ல் என்ன படம் பார்க்கலாம்?

8

சென்னை 14-வது சர்வதேச பட விழாவில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.8) கண்டு ரசிக்கத்தக்க படங்கள் - சில பரிந்துரைகள்:

கேஸினோ | காலை 10.00 மணி | GLORY / SLAVA | DIR: KRISTINA GROZEVA | BULGARIA | 2016 | 101'


பல்கேரிய திரைப்படமான இதில் எளிய வாழ்க்கையை வாழும் ரயில்வே ஊழியர் ஒருவர் தணடவாளத்தில் லட்சக்கணக்கான பணம் சிதறிக்கிடப்பதைப் பார்க்கிறார், அதனை முறைப்படி போலீசிடம் ஒப்படைக்கிறார். ஆனால் போக்குவரத்து அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரி ஜூலியா ஸ்டைகோவா ஊழல் வழக்கு ஒன்றைத் திசைத்திருப்ப இவரை பயன்படுத்தத் திட்டமிடுகிறார். இவரது எளிமையான வாழ்க்கை அரச/ஆட்சி அதிகாரத்தின் கோரப்பிடியில் சிக்குகிறது.

ஆர்கேவி | பிற்பகால் 2.40 மணி | THE TEACHER / UCITELKA | DIR: JAN HREBEJK | SLOVAKIA | 2016 | 102'

1980களில் படம் பயணிக்கிறது. ஆசிரியரான ட்ராசிசோவா தனது மாணவர்களை பயன்படுத்தி அவர்களது பெற்றோர்களை பயமுறுத்துகிறார். தொடர்ந்து தனது சுய தேவைக்காக மாணவர்களை பயன்படுத்துவார் ட்ராசிசோவா. தனது கட்டனைக்கு இணங்காத மாணவர்களை தேர்வில் தோல்வி அடையச் செய்வார். ஒரு கட்டத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ட்ரோசிசோவை நீக்கம் செய்ய மாணவர்கள், பெற்றோர்களுக்கான சிறப்பு கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்வார் இதில் ட்ரோசா நீக்கப்படுகிறாரா... அல்லது தனது தந்திர செயலால் பணியை தக்க வைத்துக் கொள்கிறாரா என்பதே இந்த படத்தின் கதை.

கேஸினோ | பிற்பகல் 2.30 மணி | DOGS / CAINI | DIR: BOGDAN MIRICA | ROMANIA / QATAR | 2016 | 104'

பச்சாரெஸ்ட் பகுதியில் இருந்து உக்ரைன் எல்லைப்பகுதிக்கு வந்துள்ள ரோமன் எனும் இளைஞன் அங்கு தாத்தா தனக்கு வழங்கிய நிலத்தை விற்க வருகிறான். ஆனால் அந்த நிலத்தை விற்க முடியாத சூழல் ஏற்படுகிறது. ஏற்கெனவே தாத்தா ஒரு உள்ளூர் குற்றவாளிகளின் தலைவனாக செயல்பட்டவர். இதனால் பாதிக்கப்பட்டவர் நிலத்தை விற்கவிடாமல் செய்யவே பிரச்சனையை இளைஞன் எப்படி எதிர்கொள்ளத் துணிகிறான். கடைசியில் முக்கோண வன்முறையொன்றில் மூன்றுபேர் பெரும் சண்டையில் சிக்குகிறார்கள். மிக மிக முக்கியமான படம்

ஐனாக்ஸ் 3 | இரவு 7.00 | DEATH IN SARAJEVO | DIR: DANIS TANOVIAE | SARBIA | 2016 | 85'

சரஜிவோவில் உள்ள ஓட்டல் ஐரோப்பாவில் ஐரோப்பிய யூனியன் சார்பில் நடக்க உள்ள மிகப்பெரிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. 1914ல் கொல்லப்பட்ட ஆர்ச்டக் ஃப்ரான்ஸ் ஃபெர்டினேந்த் எனும் தேசிய தலைவரின் நூற்றாண்டுவிழாவுக்காக அந்த ஓட்டல் தயாராகிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் அந்த ஓட்டலின் பணியாளர்கள் வேறு ஒரு பிரச்சனையில் சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு இரண்டுமாதங்களாக சம்பளம் வரவில்லை. ஏற்கெனவே ஓட்டல் அடகு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பணியாளர்கள் நிகழ்ச்சிநடக்கும் இரவின்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதென முடிவுஎடுக்கிறார்கள். ஒரு பக்கம் விழா ஏற்பாடுகள் இன்னொரு பக்கம் வேலைநிறுத்தப் பிரச்சனைகள்... இரண்டும் ஒரு புள்ளியில் சந்திக்கும் சவாலை திரைப்படம் மிக விறுவிறுப்பாக சொல்கிறது.

ஐனாக்ஸ் 2 | மாலை 4,30 மணி | SLACK BAY / MA LOUTE | DIR: BRUNO DUMONT | FRANCE / GERMANY | 2016 | 122'

1919-ன் கோடைக் காலம். சானல் கோஸ்ட் கடற்கரையில் பலர் மர்மமாக காணாமல் போகின்றனர். அதை விசாரிக்க மேச்சின், மால்ஃபாய் இருவரும் அங்கு வருகின்றனர். அங்கு ஸ்லாக் பே என்ற இடத்தில் தான் இந்த மர்மம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்கின்றனர். அங்கு கரையில் வித்தியாசமான ஒரு மீனவ குடும்பமும், மலை மேல் இருக்கும் விடுதியில் ஒரு குடும்பமும் வசிக்கிறது. இரு குடும்பமும் சந்திக்கும்போது அவர்களின் அஸ்திவாரமே ஆடிப்போகிறது.

ஐனாக்ஸ் 2 | காலை 10.15 மணி | COCONUT HERO / COCONUT HERO | DIR: FLORIAN COSSEN | GERMANY |2015 | 101'

16 வயதான மைக் வாழவே பிடிக்காத இளைஞன். சாக வேண்டும் என முயற்சிக்கும் அவனுக்கு மூளையில் கட்டி இருக்கிறது என்றும், அது தன் உயிரையும் கொல்லும் என்றும் தெரியவருகிறது. ஒருவழியாக தான் நினைத்தது நடக்கப்போகிறது என சந்தோஷப்படும் மைக்கின் வாழ்க்கை, ஒரு பெண்ணை பார்த்து காதல் வயப்பட்டதும் அடியோடு மாறுகிறது.

கேஸினோ | மாலை 4.40 மணி | LOOP | HUROK | DIR: ISTI MADARASZ | HUNGARY | 2016 | 95'

ஆடம், கர்ப்பமாகியிருக்கும் தனது காதலியை, ஒரு விபத்தில் இழக்கிறான். ஆனால் அவளது மரணத்துக்குக் காரணமான சம்பவங்களை சரி செய்ய, ஆடமுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் இந்த வாய்ப்பு அவ்வளவு எளிமையானதல்ல. ஆடம் இதற்கு முன் எடுத்த முடிவுகளின் பின் விளைவுகளை கையாண்டு, தனது காதலியின் உயிரையும் காப்பாற்ற வேண்டும்.

கேஸினோ | பகல் 12.00 மணி | THE GOLDEN ERA / HUANG JIN SHI DAI | DIR: ANN HUI | HONGKONG | 2014 | 178'

ஒரு மனிதரின் வாழ்க்கைப் பற்றிய உண்மையைத் தெரிந்து எழுதும் வாழ்க்கை வரலாறு எழுத்தாளர் என்று தன்னை சொல்லிக்கொள்வதில்லை. மாறாக, ஒரு பலவகை சித்தரிப்புகளை படைக்கும் திறன்படைத்த கவி, ஸியோ ஹாங். அவர் தனது 31 வயதில் காசநோயினால் தாக்கப்பட்டு 1941ல் இறந்தார். நிலப்பிரபுத்துவ ஆட்சி முடிவுக்கு வந்ததிலிருந்து பசிபிக் போர்வரையுள்ள சீன வரலாற்றின் சமீபத்திய வரலாற்றுக் காலத்தில் மிகவும் கொந்தளிப்பான நேரங்களில் அனுபவம் மிக்கவர். ஹுய் வரையிலான பரந்துவிரிந்து வரலாற்றின்முன் டாங் வெய் ஒரு கவிஞராக ஒரு நுட்பமான அவரது உளவியல் ஓவியத்தை தீட்டுவதோடு தொடர்ந்து கலைஞனின் ஆன்மாவை வளர்த்தெடுக்கிறார். வரலாற்றின் சேதாரத்திலிருந்து தப்பித்து இந்த வரைக்குமாவது பாதுகாப்பாக உயிர்பிழைத்தேனே என்று எழுதிச் செல்லும் ஸியோ ஹாங் அமைதி, சமாதானம் ஆகியவை குறித்து எழுதி முடிக்கிறார்.


சென்னை சர்வதேச திரைப்பட விழாஉலக சினிமா

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x