Published : 16 Oct 2014 09:54 AM
Last Updated : 16 Oct 2014 09:54 AM

தங்கம் இறக்குமதி 5 மடங்கு அதிகரிப்பு

கடந்த செப்டம்பர் மாதத்தில் தங்கம் இறக்குமதி 5 மடங்கு அதிகரித்து 95 டன்னாக இருக்கிறது. விழாக்கால தேவைகள் மற்றும் சர்வதேச அளவில் தங்கம் விலை குறைந்தது ஆகிய காரணங்களால் தங்கத்தின் இறக்குமதி அதிகரித்ததாக துறை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

கடந்த செப்டம்பரில் 95 டன் தங்கள் இறக்குமதி செய்யப் பட்டதாக அனைத்திந்திய ஜெம் மற்றும் நகை வர்த்தக கூட்ட மைப்பின் இயக்குநர் பச்ராஜ் பாமல்வா தெரிவித்தார்.

கடந்த 2013 செப்டம்பர் மாதத்தில் தங்க இறக்குமதி 15 முதல் 20 டன்னாக இருந்தது. சர்வதேச தங்கம் குறைந்தது முக்கியமான காரணமாகும். கடந்த ஒரு வருடத்தில் தங் கத்தின் விலை 10 முதல் 15% சரிந்தது. மேலும் விழாக்காலத் துக்கான தங்க நகை நிறுவனங் களும் அதிகமாக இறக்குமதி செய்ததாக அவர் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x