Last Updated : 18 Oct, 2013 05:58 PM

 

Published : 18 Oct 2013 05:58 PM
Last Updated : 18 Oct 2013 05:58 PM

வாழ்நாள் சாதனையாளர் விருதை என் குருநாதருக்கு அர்ப்பணிக்கிறேன் : கமல்

மும்பை திரைப்பட விழாவில் வழங்கப்பட்ட வாழ்நாள் சாதனையாளர் விருதை இயக்குநர் பாலசந்தருக்கு அர்ப்பணிப்பதாக நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

15-வது மும்பை திரைப்பட விழா, மும்பையில் லிபர்டி திரையரங்கில் பிரம்மாண்டமாக தொடங்கியது. கமல், சோனாக்‌ஷி சின்கா, நந்திதா தாஸ், திவ்யா தத்தா உள்ளிட்ட பலர் துவக்க விழாவில் கலந்து கொண்டார்கள்.

இவ்விழாவில் கமல்ஹாசனுக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கி கெளரவிக்கப்பட்டது. மஹாராஷ்டரா முதல்வர் பிரித்விராஜ் சவான் அவ்விருதினை கமலுக்கு வழங்கினார்.

விருதைப் பெற்றுக்கொண்டு ஏற்புரையாற்றிய கமல் "எல்லாரும் இயக்குநர் பாலசந்தார் தான் என்னை கண்டிபிடித்தார் என்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை என்னை உருவாக்கியவர் அவர். அவரைப் போன்ற வாத்தியார்கள் இருந்ததால்தான், இந்தளவிற்கு வளர்ந்துள்ளேன். இவ்விருதினை அவருக்கு சமர்ப்பிக்கின்றேன்.

என் நடிப்பில் எந்தவிதமான வழிமுறைகளையும் கடைப்பிடித்தது கிடையாது. இவ்விருதினை பெறுவதில் சந்தோஷமாக இருக்கிறது" என்றார் நடிகர் கமல்ஹாசன்.

கதாசிரியர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், நடிகர் என பல்வேறு தளங்களிலும் சாதனை புரிந்தற்காக, கமல்ஹாசனுக்கு சாதனை விருது அளிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x