Published : 13 Jan 2017 03:11 PM
Last Updated : 13 Jan 2017 03:11 PM

நெட்டிசன் நோட்ஸ்: பைரவா- விஜய் காட்டிய வீரம்!

விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பொங்கல் பண்டிகையைக் குறிவைத்து வெளியாகி இருக்கிறது 'பைரவா'. படம் குறித்த நெட்டிசன்களின் கருத்து இன்றைய நெட்டிசன் நோட்ஸில்..

>Jenis Ajith Virat

பைரவா: முதல் பாதி - வரலாம் வா பைரவா

இரண்டாம் பாதி - எந்திருச்சு போலாம் வா.

>Ashik MHz ‏

தளபதியோட இவ்ளோ பெரிய வளர்ச்சிக்கு முக்கிய காரணமே வில்லேஜ் ஆடியன்ஸ் தான். அவங்கள முழுமையா சந்தோசப்படுத்த பைரவா மாதிரி படம் கண்டிப்பா வேணும்.

>Samy ‏

பரதன் எழுதுன வசனம்லாம் கை தட்டல் வாங்குது. ஆனா கதை சொல்ற விதத்துல சொதப்புறாரு. #பைரவா.

Rajesh Afc

பைரவா மாஸ் டயலாக்:

* ஃபேஸ்புக், வாட்ஸப், ட்விட்டர்ல தேவையில்லாத விசயத்த ஷேர் பண்ற நீங்க நல்ல விசயத்தையும் கொஞ்சம் ஷேர் பண்ணுங்க.

* இரண்டாயிரம் வருஷமா வாழப்போற? பணத்தை சும்மா பூட்டி வச்சுக்கற.

>Kavi Arasan ‏

இன்று பைரவா முதல் காட்சி பார்த்தேன். #சிறப்பு



Rama

துப்பாக்கி, கத்தி, தெறி அளவுக்கு நாங்க எதிர்பாக்கல.

ஆனா பரதன் கிட்ட எதிர்பார்த்தத விட அதிகமாவே சந்தோசம் கிடைச்சிருக்கு. #பைரவா

>bri2o

பைரவா விஜய்யின் வீரம்.

Ashik MHz

பைரவா மாதிரி படங்களால தான், ஒவ்வொரு கிராமத்து பெண்களும் விஜய்யை ஒரு அண்ணணா, தம்பியா, மகனா பாக்குறாங்க

-- நான் கிராமத்தில் இருந்து வந்தவன் --



>மீனம்மா ‏

முழு எண்டர்டெயின்மெண்ட். பக்கா மாஸ். விஜய் பெர்ஃபார்மன்ஸ் சான்சே இல்ல.. ரசிகன் படத்தில் பார்த்த மாதிரியே இன்னும் இருக்கார். செம்ம ஃபிட்டா.

>Thanujan Ravichandran

விஜய் ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கலாம்.. ஆனால் காமன் ஆடியன்சுக்கு இந்த திரைப்படத்தின் தொய்வான திரைக்கதை அலட்சியத்தை கொடுத்தாலும் பொங்கலுக்கு வேறு எந்த படமும் இல்லாத காரணத்தால் நிச்சயம் இந்த திரைப்படம் கலெக்ஷனை அள்ளும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

>jack_son

துப்பாக்கி கத்தி தெறி படங்கள் என்னை ரிப்பீட்டா பாக்க வச்சுது

இப்போ அந்த வரிசைல பைரவா படம் ரிப்பீட்டா பாக்க தோணுது,

>Viswa

#பைரவா சுமார்னு சொன்னால் நீ அஜித் ரசிகன்னா அப்படின்னு ஒரு குரூப் கிளம்பும். #இன்னும் பெட்டரா பண்ணியிருக்கலாம் மொமண்ட்.

>Thanujan Ravichandran

பரதன் அழகிய தமிழ் மகனை மிஞ்சினாலும், விஜய் தெறியை மிஞ்சவில்லை #Bairavaa

>பிரம்மன்

பைரவா சிவகாசி பார்ட் 2 மாதிரி இருக்கு. ஒரு தடவை பார்க்கலாம். படம் ஓடிரும்.

>AgentNjans

#பைரவா சண்டைக்காட்சிகள்… சிறப்பு!

மலர் அக்கா… மிகச் சிறப்பு!!

>Raj

குழந்தைகளையும், பெண்களையும் காலையில் 4 மணிக்கு தியேட்டருக்கு வர வைத்ததே விஜயின் பெரிய வெற்றி தான்.

>அஜித் வாசன் ‏

நீ திரும்பவும் வசனம் எழுதவே போயிரு சிவாஜி!!! #பரதா #பைரவா

>தமிழ் ‏

பைரவா படத்துல அந்த சோஷியல் மெசேஜை மட்டும் நீக்கிட்டு பார்த்தா "மலைக்கோட்டை" படம் மாதிரி இருக்கு.

சூர்யா ‏

எல்லா படத்திலும் இரண்டாம் பாதியில்தான் ப்ளாஷ்பேக் வரும். இதில் மட்டும் முன்னமே. ஜெகபதி பாபுவின் வில்லத்தனம் அருமை.

இரண்டாம்துக்ளக்

சத்தமா பேசாத, சுத்தமா பிடிக்காது, மொத்தமா தூக்கிடுவேன் #விசில் சத்தம் விண்ணை முட்டுது. #பைரவா

Ramsankar

முதல் பாதி: கீர்த்தி சுரேஷ் படம்

இரண்டாம் பாதி: விஜய் + டைரக்டர் படம். #பைரவா

>Sakthi Vigneshwar ‏

படத்தில் விஜய்யை இன்னும் நல்லா யூஸ் பண்ணிருக்கலாம். கீர்த்திசுரேஷ் சூப்பர். எம்ஜிஆர் ஃபார்முலா ஜில்லா 2.

>Ram Durgesh ‏

பல தனியார் கல்வி நிறுவனங்களின் பிற்போக்குத்தனத்தை சொல்லும் அருமையான கதைக்களம் கொண்ட படத்தை முடிந்தவரை கெடுத்துள்ளார் பரதன். #பைரவா

>காதல் கவிஞன் ‏@DiNeshChiNkU

#பைரவா பண்டிகை முடிந்தது. இனி பொங்கல் பண்டிகை தான்.

>sivasubramaniyan ‏

இன்னைக்கு நிறைய பேர்ட்ட இல்லாத ஒரு பழக்கம் என்ட்ட இருக்கு அது "சொன்ன வார்த்தைய காப்பாத்தறது" தியேட்டர் அதிரல் #பைரவா.

பட்டாசு ‏@pattaasu

விஜயோட பெர்பாமென்ஸ் மட்டும் தான் இருக்கு. வேறேதும் இல்ல. #பைரவா

>சாமுவேல் ராஜா ‏

கதையே இல்லாம வலுவான திரைக்கதை #கில்லி.

வலுவான கதை இருந்தும் சொதப்பலான திரைக்கதை #பைரவா. அம்புட்டுதான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x