Last Updated : 04 Oct, 2014 04:07 PM

 

Published : 04 Oct 2014 04:07 PM
Last Updated : 04 Oct 2014 04:07 PM

தயாராகிறது சூது கவ்வும் இரண்டாம் பாகம்

நலன் குமாரசாமி இயக்கவிருக்கும் 'கை நீளம்' திரைப்படம், 'சூது கவ்வும்' படத்தின் இரண்டாம் பாகமாக தயாராக இருக்கிறது.

விஜய் சேதுபதி, சிம்ஹா, சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடிப்பில், நலன் குமாரசாமி இயக்கிய படம் 'சூது கவ்வும்'. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, சி.வி.குமார் தயாரித்திருந்தார்.

விமர்சகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் 'சூது கவ்வும்' படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இப்படத்தின் தீம் மியூசிக்கை தற்போது பலரும் ரிங் டோன்களாக வைத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் 'கை நீளம்' படம் குறித்து நலன் குமாரசாமி, "'கை நீளம்' திரைப்படம் 'சூது கவ்வும்' படத்தின் இரண்டாம் பாகமாக தயாராக இருக்கிறது. டிசம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. அதனைத் தொடர்ந்து மூன்றாம் பாகமும் இயக்கத் திட்டமிட்டு இருக்கிறேன்." என்று கூறியிருக்கிறார்.

'கை நீளம்' படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. கெளதம் கார்த்திக் நாயகனாக நடிக்கவிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகி இருந்தாலும், தயாரிப்பு நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x