Last Updated : 04 Apr, 2017 11:40 AM

 

Published : 04 Apr 2017 11:40 AM
Last Updated : 04 Apr 2017 11:40 AM

தயாரிப்பாளர் சங்கத் தலைவராக ஏப்.6-ல் விஷால் பதவியேற்பு

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவராக ஏப்ரல் 6-ம் தேதி பதவியேற்கவுள்ளார் விஷால்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையிலான 'நம்ம அணி' பெரும் வெற்றி பெற்றுள்ளது. புதிய நிர்வாகிகளின் பதிவியேற்பு விழா ஏப்ரல் 6-ம் தேதி மாலை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விஷால் பேசியதாவது, "இது முக்கியமான தேர்தல். எல்லோரும் எதிர்பார்த்த இந்த மாற்றம் ஒரு தனி மனிதனுக்கானது அல்ல. ஒரு அணிக்காக அல்ல. ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்காக. அந்த அடிப்படையில் இந்த அணியை தேர்வு செய்தவர்களின் நம்பிக்கை வீண்போகாது. நாங்கள் இந்த பதவிக்கு தகுதியானவர்களா? என்பதை செயல்களில்தான் காட்ட முடியும்.

வெற்றி அறிவிப்பு வந்த இரவே செயல்பாடுகளில் இறங்கிவிட்டோம். வரும் வியாழக்கிழமை ஏப்ரல் 6-ஆம் தேதி பதவி ஏற்பு விழா நடைபெறவுள்ளது. தயாரிப்பாளர்கள் குடும்பத்தோடு வர வேண்டும். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முதல் செயற்குழு கூட்டத்திலேயே திருட்டு விசிடி பிரச்சினையை கையில் எடுப்பது குறித்த ஆலோசனை இருக்கும். திருட்டு விசிடி தடுப்பு பிரிவு தலைவராக இயக்குநர் மிஷ்கின் செயல்படுவார்.

தயாரிப்பாளர்களுக்கான மானியம் குறித்த பிரச்சினை பற்றியும் அரசுடன் பேசி ஒரு முடிவு எடுக்கப்படும். இனிமேல் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நன்மைக்காக தயாரிப்பாளர்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய நடிகர் சங்கமும் சேர்ந்து குரல் கொடுக்கும். தயாரிப்பாளர்கள் சங்கமும், நடிகர் சங்கமும் இணைந்து ஆண்டுதோறும் திரைப்பட விருது நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு உள்ளோம். அதேபோல இசையமைப்பாளர் இளையராஜாவிடம் அனுமதி பெற்று ஒரு விழா நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

புதிய நிர்வாகிகளுக்கு பல்வேறு சங்கங்களின் சார்பில் பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x