Last Updated : 25 Jun, 2017 05:19 PM

 

Published : 25 Jun 2017 05:19 PM
Last Updated : 25 Jun 2017 05:19 PM

மேயாத மான் பர்ஸ்ட் லுக் வெளியீடு

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் வைபவ் நாயகனாக நடிக்கும் 'மேயாத மான்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம்' தற்போது தமிழ் திரையுலகிலும் படத்தயாரிப்பில் இறங்கியுள்ளது. முதலாவதாக 2 படங்களையும், 1 வெப் சீரீஸையும் தயாரித்து வருகிறார்கள்.

இதில் முதல் தயாரிப்பாக 'மேயாத மான்' படத்தை தயாரித்து வருகிறார் கார்த்திக் சுப்புராஜ். வைபவ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ப்ரியா பவானி ஷங்கர் நாயகியாக நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் நாடகத்தில் நடித்து பெரும் வரவேற்பைப் பெற்றவர் ப்ரியா பவானி ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரத்தின குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்துக்கு விது ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x