Last Updated : 12 Jun, 2016 09:07 AM

 

Published : 12 Jun 2016 09:07 AM
Last Updated : 12 Jun 2016 09:07 AM

கும்கி 2 வேலைகளை விரைவில் தொடங்குவோம்: விக்ரம் பிரபு நேர்காணல்

“இதுதான் நம்ம அடுத்தப் படம்னு ‘வாகா’ கதையை கேட்டு கிட்டத்தட்ட மூணு வருஷம் இருக் கும். இன்னைக்கு ‘யூ’ சான்றிதழோட படம் தயா ராயிடுச்சு. ஒரு நீண்ட பயணத்தை இந்தப் படம் கொடுத்துச்சு. டைரக்டர் குமாரவேலன் படத்துக்காக ரொம்பவே மெனக்கெட் டார். நிச்சயம் நம்ம தமிழ் சினிமாவை பெருமைப்படுத்துற ஒரு சினிமாவா ‘வாகா’ இருக்கும்” என்று நிஜ ராணுவ வீரரின் மிடுக்குடன் பேசத் தொடங்குகிறார் விக்ரம் பிரபு.

‘வாகா’ படத்தை அடுத்து ‘வீர சிவாஜி’, ‘முடிசூடா மன்னன்’ என்று வரிசைகட்டிக்கொண்டு படங் களில் நாயகனாக நடித்துவரும் அவரைச் சந்தித்தோம்.

ராணுவ களம், காஷ்மீர் குளிர்னு ‘வாகா’வுக்காக அதிக உழைப்பை செலுத்தியிருப்பீர்களே?

இந்தப் படத்துல எல்லைப் பாது காப்பு படை வீரனா நடிச்சிருக் கேன். படத்தோட ஸ்டில்ஸ் முதல்ல வெளியில வரும்போது எல் லாருமே, ‘‘ராணுவ வீரன் எப்படி தாடி வெச்சிருக்கலாம்?’’னு கேட் டாங்க. எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் எப்போதுமே நாட் டின் எல்லையில இருக்குறதால எக்ஸ்ட்ரீம் கண்டிஷன்லதான் வேலை பார்ப்பாங்க. அதனால அவங்க எந்த மாதிரியான ஹேர் ஸ்டைல், தாடி வேணும்னானும் வச்சிக்கலாம். இதெல்லாம் படம் பார்க்கும்போது புரியும். படத்துல என்னோட கதாபாத்திரம் உட்பட எல்லா கதாபாத்திரங்களும் ராணு வத்துல இருக்குறவங்களை பார்த்து உருவானதுதான். எங்க ளோட மொத்த குழுவும் அதுக்காக எடுத்துக்கிட்ட தேடல், உழைப்பு மிகப் பெரியது.

‘வீரசிவாஜி’ படமும் இறுதிகட் டத்தை நெருங்கிடுச்சே?

‘வாகா’ மாதிரி படம் பண் ணும் அதே நேரத்துல ஒரு நல்ல கமர்ஷியல் படமும் பண்ண ணும்னு தான் ‘வீர சிவாஜி’ படத்தை தொடங்கினோம். ‘கும்கி’ கேமராமேன் சுகுமார் சார் மூலம் இந்தப் படத்தோட இயக்குநர் கணேஷ் விநாயக்கோட அறிமுகம் கிடைச்சது. கதை, காமெடின்னு எல்லா விஷயமும் வித் தியாசமா இருந்துச்சு. படத் துல டாக்ஸி டிரைவரா நடிச் சிருக்கேன். நல்லபடியா படத்தை முடிச்சிருக்கோம்.

‘முடிசூடா மன்னன்’ எப்படி தயாராகி வருகிறது?

திருச்சியில ஒரு மாசம் ஷூட் டிங் முடிச்சிட்டோம். எஸ்.ஆர்.பிரபாகரன் கதையில பக்காவா இருப்பார். ஆக்‌ஷன் படம். ஹீரோயின் மஞ்சிமா மோகன். இது சத்யஜோதி பிலிம்ஸ் படம்.

பிரபுவோட 200-வது படம் ‘மீன் குழம்பும் மண் பானையும்’. சொந்த வீட்டு தயாரிப்பு. அதுல ஏன் நீங்க நடிக்கலை?

அப்பாவோட சேர்ந்து நடிக் கிறதை பெரிய விஷயமாத்தான் பார்க்கிறேன். அதுக்கு ஒரு நல்ல கதையை ரொம்ப நாளாவே தேடிக்கிட்டிருக்கோம். அப்பாவுக்கு இது 200-வது படம். ரொம்பவே சந்தோஷமா இருக்கு. ஆனா, 200 ங்கிற அந்த எண்ணிக்கையில நான் இருந்தே ஆகணும்னு நினைக்கலை. சும்மா வந்துட்டு போற மாதிரி இல்லாம கதை முழுக்க இருக்குற மாதிரி விரும்புறேன்.

‘சிவாஜி புரொடக்‌ஷன்ஸ்’ என்ற நிறுவனம் இருக்கும்போது உங்கள் குடும்பத்தில் இருந்தே இரண்டு தயாரிப்பு நிறுவனங்களை தொடங் கியது ஏன்?

பெரிய தயாரிப்பு நிறுவனத் துக்கு கீழே இயங்கும் கிளைக் கம்பெனி மாதிரி ஒண்ணு, ரெண்டு தயாரிப்பு நிறுவனங்கள் இருக்கணும்னுதான் இதை தொடங்கியிருக்கோம். சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் கம்பெனியில் தாத்தா, அப்பா, ரஜினி சார், கமல், சார், அஜித் சார்னு பெரிய நடிகர்களின் படங்களை எடுத்திருக்கோம். சின்ன பட்ஜெட்ல தொடங்கி எல்லா பட்ஜெட்லயும் படம் பண்ண பொருத்தமா இருக் கட்டுமேன்னுதான், நான் ‘பர்ஸ்ட் ஆர்டிஸ்ட்’ என்ற பேர்லயும், துஷ்யந்த் ‘ஈசான் புரொடக்‌ஷன்’ என்ற பேர்லயும் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிச்சிருக்கோம்.

நான்கு ஆண்டுகளில் 10 படங்களை தொடப் போறீங்க. நிதானமா ஓடலாமே. ஏன் இவ்வளவு வேகம்?

‘குறைஞ்ச நேரத்துல நிறைய படங்கள் நடிச்சது என்னோட சொந்த அனுபவத்துக்காகத்தான். எஸ்.ஆர்.பிரபாகரன் படம் எனக்கு 9-வது படம். ஒவ்வொரு படம் முடிக்கும்முன் அடுத்தடுத்து படம் அமைஞ்சது. அத்தனை படங்களின் கதைகளையும் எடுத்துக்கோங்க, நிதானமா செய்த மாதிரிதான் இருக்கும். ஒரு முறை ரஜினி சார், ‘‘ஃபில்டர் பண்ணி வருஷத்துக்கு ஒரு படம்னு பண்ணாதீங்க. இதுதான் உங்களோட ஏஜ். வருஷத்துக்கு ரெண்டு, மூணு படங்கள் பண்ணுங்க!’’ன்னு சொன்னார். இந்த வயசுலதான் எல்லாமும் செய்ய முடியும். இன்னைக்கு நான் ஒரு நடிகரா இருக்கேன். ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப பண்ண மாட்டேன். பல விஷயங்களைக் கத்துக்கிட்டு நிறைய பண்ணணும். அதைத்தான் நான் செய்றேன்.

‘கும்கி 2’ படத்துக்கு இயக்குநர் பிரபுசாலமன் தயாராகிறாராமே?

கடந்த ஒரு வருஷமாவே பிரபு சாலமன் சார் என்கிட்ட கதை ரெடின்னு அதைப் பற்றி பேசி வருகிறார். அவரோட ‘தொடரி’ படம் ரிலீஸுக்கு பிறகு ரெண்டுபேரும் சேர்ந்து அதைப் பத்தி பேசுவோம். நிச்சயம் நல்ல செய்தியோடு அதுக்கான வேலைகளை விரைவில் தொடங்குவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x