Published : 11 Jan 2017 06:29 PM
Last Updated : 11 Jan 2017 06:29 PM

சென்னை பட விழா | ஆர்கேவி & பெலாஸோ | ஜன.12 | படக்குறிப்புகள்





சென்னை 14-வது சர்வதேச பட விழாவில் வியாழக்கிழமை (ஜன.12) ஆர்கேவி ஸ்டூடியோ அரங்கில் அரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »



காலை 10.00 மணி | THEY WILL RETUREN | ELES VOLTAM | DIR: MERCELO LORDELLO | BRAZIL | 2012 | 100'



கிரிஸ், வயது 12 மற்றும் அவளது அண்ணன் ஆகியோரை சாலையோரத்தில் பெற்றோர் விட்டுவிடுகிறார்கள். கடைசியில் அது ஒரு தண்டனைபோல் ஆகிவிடுகிறது. ஆனால் அது மிகப் பெரிய சவாலாக அமைகிறது. அவள் வீட்டுக்குத் திரும்பும் வழியை கண்டுபிடிக்கிறாள். அந்தப் பயணத்தில் அவள் வித்தியாசமான உண்மைகளைக் காண்கிறாள். இன்றைய நவீன உலகத்தின் யதார்த்த வாழ்க்கையை காணும் கிரைஸ் எனும் சிறுமி தன்னைக் கண்டடைவதும் நிகழ்கிறது.



*****



பகல் 12.00 மணி | POST TENEBRS LUX | DIR: CARLOS REYGADAS | USA | 2012 | 120'



நகரத்தில் வாழ்ந்து வந்த வசதியான ஒரு குடும்பம், மெக்ஸிகோவின் கிராமப்புறத்துக்கு குடிபெயர்கிறது. அங்கு அவர்கள் சந்திக்கும் வர்க்க பேதம், குடும்பத்துக்குள் வரும் நெருக்கடியைச் சொல்லும் படம். பாரபட்சமில்லாத இயற்கை உலகில் ஒரு குடும்பத்தின் நிலை என்ன என்பதை அற்புதமான ஒளிப்பதிவில் உணர்ச்சிகளோடு பிரதிபலிக்கும் படம்.



*****



பிற்பகல் 2.30 மணி | THE PEOPLE VS. FRIZBAUER | DIR: LARS KRAUME | GERMANY | 2015 | 105'



இப்படத்தின் முக்கிய கதாபாத்திரமான தி பீப்பிள் வெர்சஸ் ஃபிரிட்ஸ் பாயர் தன்னுடைய வழக்கறிஞர் பணியில் ஈடுபாடு மிக்கவர். அவர் நாஜிக்களின் குற்றங்களை வெளிக்கொண்டுவர முயற்சிப்பவர். ஜெர்மனியில் ஒரு யூதராகப் பிறந்த ஃபிரிட்ஸ் பாயர் தன்னுடைய வழக்கறிஞர் பணியை தொடங்கியபோது அது தடைபட்டது. 1930களில் அவர் வதைமுகாம்களுக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் அங்கிருந்து அவர் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும்பொருட்டு அங்கிருந்து தப்பித்து போர் முடியும்வரை டென்மார்க் மற்றும் ஸ்வீடன் சென்றவர் ஜெர்மனிக்கு 40களில் இறுதியில்தான் வந்து தனது வழக்கறிஞர் பணியை திரும்பவும் தொடங்கினார். இப்படத்தைப் பொறுத்தவரை இக்கதையை ஒருவித நாடகத்தன்மையோடு அதன் வீரியம் குறையாமல் இயக்கியிருக்கிறார் இயக்குநர் லார்ஸ் கிராமே.



*****



சென்னை 14-வது சர்வதேச பட விழாவில் வியாழக்கிழமை (ஜன.12) பெலாஸோ 7 அரங்கில் அரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »



காலை 10.00 மணி | PROOF OF INNOCENCE| DIR: KWON JONG-KWAN | KOREA | 2016 | 120'



நல்ல காவல்துறை வீரனாக இருந்த மியுங்-மின் கிம், இப்போது குற்றவாளிகளுக்கும், அவனின் வழக்கறிஞருக்கும்

இடையிலான தரகனாகச் செயல்படுகிறான். ஒரு நாள் சிறையில் இருந்து இறந்துபோன கைதி ஒருவரிடம் இருந்து விநோதக் கடிதம் வருகிறது. அந்த விவகாரத்தில் உள் இறங்கி, விசாரணையைத் தொடங்குகிறான் கிம். கொலை வழக்கு நாட்டின் முக்கியமான பெரு நிறுவனம் ஒன்றோடு இணைகிறது.



*****



பகல் 12,00 மணி | CAPRICE / CAPRICES | DIR: EMMANUEL MOURET | FRANCE | 2016 | 100'



ஒரு ஆசிரியனாக பணியாற்றும் கிளமெண்ட் எப்போழும் மகிழ்ச்சியானவன். ஒரு இளைஞன் ஒரு நடிகையை சந்திக்கிறான். அவன் எதிர்பார்த்ததைவிட அவள் அழகாக இருக்கிறாள். மேடையில் அவள் நாடகங்களை கண்டுகளிக்கும் ரசிகனாக இருந்தவன் இப்போது அவளோடு நெருக்கமான நட்பில் திளைக்கிறான். ஆனால் அந்த இன்பம் சிலநாட்களில் நரகமாக மாறுகிறது. அவனது உண்மையான காதலி அவன் நிலையைக் கண்டு வருந்துகிறாள்.



*****



பிற்பகல் 2.30 மணி | LOOP / HUROK | DIR: ISTI MADARASZ | HUNGARY | 2016 | 95'



ஆடம், கர்ப்பமாகியிருக்கும் தனது காதலியை, ஒரு விபத்தில் இழக்கிறான். ஆனால் அவளது மரணத்துக்குக் காரணமான சம்பவங்களை சரி செய்ய, ஆடமுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் இந்த வாய்ப்பு அவ்வளவு எளிமையானதல்ல. ஆடம் இதற்கு முன் எடுத்த முடிவுகளின் பின் விளைவுகளை கையாண்டு, தனது காதலியின் உயிரையும் காப்பாற்ற வேண்டும்.



*****



மாலை 4.40 மணி | UIO: TAKE ME FOR A RIDE | | DIR: MICAELA RUED | ECUADOR / MEXICO / COLOMBIA | 2016 | 68'



பள்ளி இறுதியாண்டு படிக்கும் சாராவுக்கு நிறைய நண்பர்கள் இல்லை. அம்மா பயங்கர அகந்தை. அப்பாவோ எதையும் சரியாக புரிந்துகொள்ளக்கூடியவர். இதற்கிடையில் மன உளைச்சலும் வீட்டுப் பதற்றமுமாக பள்ளிக்குச் செல்லவேண்டும். இதனால் அவள் பெரும்பாலும் சாலையின் ஏதாவது ஒரு சந்தில் நுழைந்து சற்றுநேரம் சிகரெட் பிடித்து மனதை ஆற்றிக்கொள்வாள். அவளுக்கென்று ஒரு தோழி ஆந்த்ரே என்பவள் வரும்வரைதான் இந்த வலி. ஆந்த்ரேவுடனான அவளது நட்பு நெருக்கமாகிறது. மூடிய கதவுகளுக்குப் பின்னால் நெருக்கதைக் கண்டறிந்தபோது புதிய உறவு கிளைத்தது. குழப்பத்தைக் கவலைகளையெல்லாம் துரத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x