Published : 07 Jan 2017 04:54 PM
Last Updated : 07 Jan 2017 04:54 PM

சென்னை பட விழா | ஆர்.கே.வி | ஜன.8 | படக்குறிப்புகள்

சென்னை 14-வது சர்வதேச பட விழாவில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.8) ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 10.00 மணி | A HISTORY OF ETERNITY | DIR: CAMILO CAVALCANTE | BRAZIL | 2014 | 121'

காதல், ஆசைகள், கனவு பற்றி கூறுகிறது ஹிஸ்டரி ஆப் இடர்னிட்டி என்ற திரைப்படம். படத்தின் மொத்த காட்சிகளும் ஒரே கிராமத்தில் பதிவாக்கப்பட்டுள்ளது. மனித உறவுகளின் சோகங்களையும், அதன் உள்ளூணர்வு தருணங்களை யதார்த பாணியில் விளக்குகிறது இப்படம்.

பகல் 12.00 மணி | IRUDHI SUTRU | DIR: SUDHA K PRASAD | TAMIL | 2012 | 150'

சர்வதேச அரங்கில் நாட்டுக்குப் பெருமைத் தேடித் தரக்கூடிய திறமையாளர்கள் வறுமைச் சூழலிலும் வெகுவாக விரவிக்கிடக்கிறார்கள் என்ற நிஜத்தின் நிழல்தான் இறுதிச்சுற்று. அதேபோல், நம் விளையாட்டுத் துறையில் மறைந்துகிடக்கும் அரசியலும் வெகுவாக துகிலுரிக்கப்பட்டது. மாஸ் வரவேற்புக்காக திரைக்கதையில் இயன்றவரையில் சமரசம் செய்துகொள்ளாததன் மூலம் ப்யூர் சினிமாவை தர முயற்சி செய்ததும் குறிப்பிடத்தக்கது. குத்துச்சண்டை விளையாட்டு - அதன் பின்புலம் - உளவியல் உள்ளிட்ட அம்சங்களை பேசிய விதமும், கையாளப்பட்ட திரைமொழியும் இறுதிச்சுற்று எனும் படைப்பைத் தூக்கி நிறுத்துகிறது.

பிற்பகல் 2.30 மணி THE TEACHER / UCITELKA | DIR: JAN HREBEJK | SLOVAKIA | 2016 | 102'

1980களில் படம் பயணிக்கிறது. ஆசிரியரான ட்ராசிசோவா தனது மாணவர்களை பயன்படுத்தி அவர்களது பெற்றோர்களை பயமுறுத்துகிறார். தொடர்ந்து தனது சுய தேவைக்காக மாணவர்களை பயன்படுத்துவார் ட்ராசிசோவா. தனது கட்டனைக்கு இணங்காத மாணவர்களை தேர்வில் தோல்வி அடையச் செய்வார். ஒரு கட்டத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ட்ரோசிசோவை நீக்கம் செய்ய மாணவர்கள், பெற்றோர்களுக்கான சிறப்பு கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்வார் இதில் ட்ரோசா நீக்கப்படுகிறாரா அல்லது தனது தந்திர செயலால் பணியை தக்க வைத்துக் கொள்கிறாரா என்பதே இந்த படத்தின் கதை.

மாலை 4.30 மணி | BLIND SPOT | DOUDEGE WENKEL | DIR: CHRISTOPHE WANGNER | LUXEMBOURG | 2012 | 96'

மக்களால் நேசிக்கப்படும் ஒரு போலிஸ் அதிகாரி கொடூரமாகக் கொல்லப்படுவதிலிருந்துதான் படம் தொடங்குகிறது. கொலை செய்தவர்களைக் கண்டுபிடிக்க இன்ஸ்பெக்டர் ஹேஸ்டேர்ட் புலனாய்வைத் தொடங்குகிறார். கொலைசெய்யப்பட்ட போலீஸ்காரரின் சகோதரர் ஆலிவரைத் தேடிச் செல்கிறார். அவரிடம் இவர் எதிர்பார்த்த விஷயங்கள் ஏதும் கிடைக்காத நிலையில் ஹேஸ்டேர்ட் சற்றே தடுமாறுகிறார். அவரும் புலனாய்வு செய்யத் தொடங்குகிறார். லக்ஸம்பர்க் நாட்டின் முக்கிய நகரான கிராண்ட் டச்சியில் நடைபெறும் இந்த விசாரணையில் போகப்போக பல முக்கிய சம்பவங்கள் வெளியே வரத் தொடங்குகின்றன.

இரவு 7.15 மணி காட்சி இல்லை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x