Published : 28 Sep 2018 10:30 AM
Last Updated : 28 Sep 2018 10:30 AM

கவலையில் ‘பிக் பாஸ்’ ரசிகர்கள்

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி முடிய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி ஷோ, ‘பிக் பாஸ் 2’. கடந்த வருடம் தொடங்கப்பட்ட நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸன் இது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில், ஜனனி, ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த், பாலாஜி, ரித்விகா, அனந்த் வைத்யநாதன், மமதி சாரி, நித்யா, என்.எஸ்.கே.ரம்யா, பொன்னம்பலம், சென்றாயன், டேனியல், மஹத், வைஷ்ணவி, மும்தாஜ், ஷாரிக் ஹாசன் ஆகியோர் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர்.

இடையில், விஜயலட்சுமியும் புதிய போட்டியாளராக ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் சென்றுள்ளார். அனந்த் வைத்யநாதன், மமதி சாரி, நித்யா, என்.எஸ்.கே.ரம்யா, பொன்னம்பலம், சென்றாயன், டேனியல், மஹத், வைஷ்ணவி, மும்தாஜ், ஷாரிக் ஹாசன், யாஷிகா ஆனந்த், பாலாஜி ஆகியோர் போட்டியில் இருந்து விலக்கப்பட்ட நிலையில், ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா தத்தா, விஜயலட்சுமி ஆகிய 4 பேரும் இறுதிப் போட்டியாளர்களாகக் களத்தில் இருக்கின்றனர்.

கடந்த ஜூன் 17-ம் தேதி தொடங்கிய ‘பிக் பாஸ் 2’, மூன்றரை மாதங்களைக் கடந்து இறுதிக்கட்டத்தை எட்டப் போகிறது. பொதுவாக, 100 நாட்கள் மட்டுமே ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். அப்படிப் பார்த்தால், கடந்த 24-ம் தேதியே ‘பிக் பாஸ்’ இறுதிப்போட்டி ஒளிபரப்பாகியிருக்க வேண்டும். ஆனால், அன்று திங்கட்கிழமை என்பதால், 6 நாட்கள் கூடுதலாகச் சேர்த்து மொத்தம் 106 நாட்களுக்கு ‘பிக் பாஸ் 2’ ஒளிபரப்பாகி வருகிறது.

வருகிற ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 30) ‘பிக் பாஸ் 2’ இறுதிப்போட்டி ஒளிபரப்பாகும். அதன்பிறகு இந்த நிகழ்ச்சியைப் பார்க்க முடியாதே எனக் கவலையில் இருக்கின்றனர் ‘பிக் பாஸ்’ ரசிகர்கள். கடந்த 100 நாட்களுக்கும் மேலாக சரியாக இரவு 9 மணிக்கு டிவி முன் அமர்ந்து ‘பிக் பாஸ்’ பார்க்கத் தொடங்கிய ரசிகர்களுக்கு, இனிமேல் 9 மணி வந்தாலே ‘பிக் பாஸ்’ நினைவு வந்துவிடும். (இந்த வாரம் மட்டும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது).

பொதுவாக, ஒரு வாரம் பழகினாலே தங்கள் மனதுடன் நெருக்கமாக்கிக் கொள்வார்கள் தமிழ் மக்கள். அதனால் தான், இங்கு ஒரு சீரியலை ஏழெட்டு வருடங்கள் கூட இழுக்க முடிகிறது. அப்படி இருக்கையில், 106 நாட்கள் குடும்பத்தில் ஒன்றாக மாறிப்போன ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி முடியப் போகிறது என்ற வருத்தம் ரசிகர்களுக்கு இருக்கத்தானே செய்யும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x